![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxvMVfRMDgZShVoPen9-zlStSNjGrYy-5xmEN-2stI1PBRwh24YsavdadiAFS_S7_1YfdZXyxxTbUQ0lRmIgdgmh3TPL6Pc-Efw5snBxPeSaADvXlczqoIvRucBU6Z6A7hG84YZNyIQ3p1/s400/Bodhi+Google.jpg)
தேடல்
ஞானம் கூட
இப்போது
போதி மரத்தடியில்
தேடப்படுவதில்லை!
கூகுலில் தேடப்படுகிறது!
இலவசம்
பூங்காவில் அதிகாலை
இலவச யோகா வகுப்பு!
தொடக்கத்திலிருந்த கூட்டம்
காலத்தில் குறைந்து
யோகியின் உடல் போல்
மெலிந்து விட்டது.
எல்லா இலவசங்களும்
தேர்தல் இலவசங்கள் போலக் கவர்வதில்லை!!
வேலை நாளில்
அடிக்கும் அலாரத்தை
அடித்து நிறுத்தலாம்.
தொடர்ந்து தூங்கலாம்.
விட்டு விட்டு ஒலிக்கும்
அலாரங்களை நிறுத்த
முடியாது எழுந்திருக்கலாம்.
விடுமுறை நாள்
காலையில்
மறதியில்
அடிக்கும் அலாரம்!
அன்று அது இசை!
இம்சை அல்ல!
காலத்தோடு மாறிவிட்டன!
அவைகள் எழுப்பும்
மனிதர்களின் எதிர்வினைகள்
மாறுவதில்லை!
இட்லிக் கடை போடும் ஆயாக்கள்
அலாரம் வைத்து
அதிகாலை எழுவதில்லை!
எழத் தாமதமானால்
எழும் பின்விளைவுகள்
உடற்கடிகாரத்தின்
அலாரத்தை அடிக்கவைக்கிறது.