Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Saturday, February 18, 2012

கம்ப்யூட்டர் சேல்ஸ் ரெப் ஒரு கிராமத்திற்குப் போகிறார்


ஒரு கம்ப்யூட்டர் சேல்ஸ் ரெப் ஒரு கிராமத்திற்குப் போகிறார் விற்பனைக்கு. வாங்குபவர் ஒரு ஜாக்கிரதையான கரார் மனிதர்.
கம்ப்யூட்டர் வாங்கும்போது நடந்த உரையாடல்!

கம்ப்யூட்டர் வாங்குபவர்: இந்தப் பொட்டி கிட்டி எல்லாம் நல்லா விரிச்சுக் காமிங்க! 
சேல்ஸ் ரெப்: (விரித்துக் காட்டுகிறார்!)
வா: இது என்னாது கண்ணாடி இருக்கு ஆனா மொகம் தெரியல! 
சே: இது பேர் தான் சார் மானிட்டர் !
வா:இது என்ன சூட் கேஸ், கைல புடிக்க கைப்புடி இல்லாம இருக்கு. தூக்க செரமமா இருக்கும்ல!
சே: இது சி பி யு பாக்ஸ் சார்!
வா: அது சரி! ஏன் நான் கேக்காம டைப் ரைட்டர் கொண்டு வந்தீங்க. எடுத்துட்டு போங்க 
சே: சார் இது தான் கீ போர்டு.
வா: அப்ப சரி இருக்கட்டும். பிள்ளைங்களுக்கு எ பி சி டி, ஒன்னு ரெண்டு சொல்லித்தர பயன் படுத்திக்கலாம்!
இங்க ஏன் சூட் கேஸ்ல நீளமா ஓட்ட இருக்கு!
சே: அது சி டி போடறது சார்!
வா: இங்க சொருகினா, எங்க படம் தெரியும், எங்க சத்தம் வரும்.
சே: விவரிக்கிறார்..
வா: எல்லாத்தையும் கலட்டி காமிங்க!
சே: பாக்ஸ் ஓபன் பண்ணி மதர் போர்டை காட்டுகிறார்
வா: இதென்ன கருப்பா, நீள, நீளமா இருக்கு!
சே: சார் இது தான் மெமரி சிப்ஸ்
வா: இது எதுக்கு எனக்கு. எனக்கு மெமரி ரொம்ப இருக்கு. மத்தது இருக்கட்டும் இது வேண்டவே வேண்டாம்!              
சே: சார் இது என்னோட விசிடிங் கார்டு. நான் வேலைய விட்டுப் போயிட்டதா எங்க கம்பனிக்கு போன் பண்ணி சொல்லீருங்க!