Saturday, December 18, 2010

எனது அமெரிக்கப் பயணம்-லண்டன் செல்லும் விமானத்தில்... (தொடர்ச்சி)

லண்டன் செல்லும் விமானத்தில்... (தொடர்ச்சி)


1) Dabangg படத்தை செலக்ட் பண்ணி முன்திரையில் கண்டேன். சத்ருக்கன் சின்ஹாவின் மகளை அதிகமாகப் புறமுதுகு காட்ட வைத்திருந்தார்கள்.
2) ஒன்ஸ் போகலாமென்று போய் நின்றால், நமக்கு வரும் போதெல்லாம் மத்தவங்களுக்கும் வந்து Occupied என்று toilet காட்டிக்கொண்டிருந்தது! அதை நினைத்து (நனைத்து!?) ஆத்திரம் வந்த போது, தேவையில்லாமல் "ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது" என்ற பழமொழி ஞாபகம் வந்து மேலும் ஆத்திரம் கூடியது.

3)ஒரு வழியாக vacant ஆகி உள்ளே போய் வேலை முடிந்ததும், Flush பட்டன் அழுத்தியதும் என்ன ஆகும் என்று சிந்தனை ஓடியது. கண்டிப்பாக ரயிலில் விழுவது போல் விழாது என்று மட்டும் தெரிந்தது. உலகம் நாறிவிடும்!

4) சின்ன வயதில் படித்த "தொப்பி வியாபாரியும் குரங்குகளும் கதை தான் இந்த வயதிலும் கை குடுக்கிறது. முன் சீட் பெண் நல்ல விஷுவல்சுடன் ஒரு டாகுமெண்டரி பார்த்தால், நாமும் தேடிப்பிடித்து அதைப் பார்ப்பது, பக்க வாட்டு சீட்டில் பாட்டி ப்ளேனின் கொல்லைப் புறத்தில் போய் காபி வாங்கி வந்தால் நாமும் வாங்கிக் குடிப்பது என்பவை சில உதாரணங்கள்!  'நரியும் மாடுகளும்', 'வழி விடா/விடும் ஆடுகள்' கதைகளையும் எல்லோரும் கடை பிடித்தால் நல்லது. புரியாத வயதில் அக்கதைகளைச் சொல்லிக்கொடுத்து வீணடிக்கிறார்கள். சில மாற்றங்கள் செய்து பத்தாவது அல்லது 
பன்னிரண்டுக்கு மாற்றலாம்!

5) கண்ணை மூடக் கொடுக்கும் துணிக் கண்ணாடி மாட்டிக்கொண்டதும் கண்ணை கட்டிக் காட்டில், இல்லை, காற்றில் விட்டது போல் ஆகிவிடுகிறது!

6) விமானத்தில் announce பண்ணுவதில் ஆங்கிலத்தில் சொல்வது கூடப் புரிகிறது, ஆங்கிலம் போல் ஒலிக்கும் தமிழில் சொல்வது 
புரியவில்லை. "பய்னிகள் இர்க்கை பெல்டை அன்து கொல்லவும்". தமிழ்க் கொலை செய்யும் அந்தப் பெண்ணைத் தான் ...

7) ஆடியோ செக்சனில் Opera கேட்டுப் பார்த்தேன். பாடும் ஆணையும் பெண்ணையும், ஒரு மீன் பிடி வலையில் உட்கார வைத்து 
காஷ்மீர் தால் ஏரியில் முக்கி முக்கித் தூக்கி 'அ ஆ இ ஈ' சொல்லச் சொன்னது மாதிரித் தோன்றியது. 


Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/1.html

எனது அமெரிக்கப் பயணம்-லண்டன் செல்லும் விமானத்தில்...

லண்டன் செல்லும் விமானத்தில்... 


1) டிக்கெட் அடிக்கட்டை கிழிக்கும் நபர் பாஸ்போர்ட் பார்த்து உங்க விசா பேஜ் கொஞ்சம் நனைஞ்சிருக்குன்னு சொல்லி டென்ஷன் ஆக்கிட்டார் . ஒரு பேங்க் அக்கௌன்ட் அட்ரஸ் ப்ரூஃபுக்கு ஏஜென்ட் ஒருத்தர்கிட்ட பாஸ்போர்ட்  குடுத்தேன் xerox எடுக்க . அவர் நனைச்சிட்டார் மழையில. Moral - Never give the passport to an agent on a rainy day. 

2) Flight எடுக்க  ஆரம்பிச்சதும் பூச்சி மருந்து (தமிழில் அப்படித்தான் சொன்னா ) அடிச்சானுக . வயக்காடு சமாசாரம் ஆகாயத்தில கூட நம்மள விடாது போலிருக்கு !

3) ரன்வேயில்  flight ஓடும் போது தேனி பஸ் ஸ்டாண்டில் இருந்து வீட்டுக்கு குதிரை வண்டியில் முன்பு போன மாதிரி இருந்தது . Except குதிரை சாணி வாசம் . I like both horse and horse shit smell !

4) இவ்வளவு சின்னதா மசாலா தோசை செய்ய முடியுமா?. ஆகாயத்தில் கண்ட/உண்ட அதிசயம்.

5) Duty free பொருட்கள் வண்டியில்  தள்ளிட்டு வந்தா. without duty, freeya மட்டும் இருந்தா எல்லாப் பொருளும் எனக்கே !
6) ஒரு male air hostessukku புருவம் மட்டும்  கருப்பா இருந்தது . காரணம் - இயற்கை ? புருவ டை?but இருந்தது கொஞ்சமே கொஞ்சம் டை. புதுமை ? 

7) ஒரு ஏர் ஹோஸ்டஸ் முகத்தில் நிறைய சுருக்கத்தோடு இருந்தா(ர்). உலகின் வயதான ஏர் ஹோஸ்டஸ் அவராகத்தான் இருப்பார்! இதுக்கு மேல் ஒரு சுருக்கம் அவருக்கு முகத்தில் விழுந்தால், இடமில்லாமல் கீழே தான் விழ வேண்டும். பொதுவாக மற்றவர்களும் வயது கூடி இருந்தார்கள். பேசாமல் ஏர்வேய்ஸ் பெயரை பாட்டீஸ் ஏர்வேய்ஸ் என்று மாற்றி விடலாம்.  but I respect பாட்டீஸ்!

8) நம் முன் சீட்டின் பின்னால் உள்ள திரையில் டைம் டு destination காட்டினார்கள். டச் ஸ்க்ரீனில் தொட்டு செலக்ட் பண்ணினேன் in flight informationஐ.
மற்ற சில ஏர்வேசைக் (Lufthansa, emirates) காட்டிலும், நாம் எங்கே பறந்து கொண்டு இருக்கிறோம்,எவ்வளவு நேரத்தில் இலக்கைச் சென்றடைவோம்,கிளம்பிய இடத்தில் நேரம் என்ன, இலக்கின் நேரம் என்ன எல்லாம் தெளிவாகக் காட்டினார்கள் with padam. London போய்ச்சேர இன்னும் ஒன்பது மணி நேரம் என்றது முன்திரை. "சரி தான் விடிஞ்சிரும்" என்று அலுப்பாக இருந்தது. (லண்டன் இறங்கிய போது விடிந்து மூன்று மணி நேரம் ஆகி இருந்தது.)

9) Biscuits கொண்டு வந்து one of the பாட்டீஸ் கொடுத்தார்கள். நாலைந்து வகைகள். சும்மா ஒவ்வொன்னும் dhool . நான் அந்தக்கால இந்தியாவில் ஒரு குறு நில மன்னனாக இருந்து, அப்ப இந்த biscuits சாப்பிட்டு இருந்தால், பிஸ்கட் ஆசையில், படை எடுத்துப்போய் பரங்கியர்களை வென்று, biscuits தின்று கொண்டிருந்திருப்பேன். அப்புறம் அங்க யாராவது "War Bond Wood Dollan"(?!) என்று ஒரு ஆள், கீழ் கண்டவாறு வசனம் பேசியிருப்பான் against me.

"Tax, Interest, bribe, maal ...."
"Whom you ask Tax"
 "With us did you come to Field"  
"Did you put Sapling"
"Did you remove weeds"
"There cajoling playing our clan women facial cream did you grind "


Next Page> http://venkatramvasi.blogspot.in/2010/12/blog-post_9020.html

எனது அமெரிக்கப் பயணம் - சென்னை ஏர்ப்போர்ட் ரிப்போர்ட்

எனது சமீபத்து அமெரிக்கப் பயணத்தைக் குறித்து ஒரு தொடர் எழுதும் எண்ணம் தற்செயலாக உதித்தது. 
சென்னை ஏர்ப்போர்ட் அனுபவங்கள்.... 

1) நீங்கள் உங்கள் பயணத்திற்குத் தயாராக ஒரு செக் லிஸ்டைப் பயன்படுத்தி , ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொண்டவுடன் ஒரு பேனாவினால் டிக் செய்கிறீர்கள் என்றால்...செக் லிஸ்டின் கடைசியில் பேனாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏர்ப்போர்ட் வந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ்காரி இம்மிக்ரேஷன் ஃபார்ம் கொடுத்தா ஃபில் பண்ண...ஏர்ப்போர்ட்டில பல பெண்கள்..ஆனால் என்னிடம் நோ பென்.நூறு ரூபாய் கொடுத்து பார்க்கர் பேனா ஒன்று வாங்கினேன்.  
 2) ஏர்ப்போர்ட்டில் ஏன் பலருக்குப் பசிப்பதில்லை என்று புரிந்தது. கீழே உள்ள விலைப்பட்டியைப் பாருங்கள். 
சாண்ட்விச் - ரூ.100 
உருளைக் கிழங்கு போண்டா - ரூ. 60
பர்கர் - ரூ.60
காபி - ரூ.35
3) லண்டன் ஃபிளைட் அதிகாலை 4 மணிக்கு. நள்ளிரவு 12 மணிக்கே ஏர்ப்போர்ட் வந்து சேர்ந்து.. திருவிழாவில் தொலைந்த பையன் போல அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தேன். 
4) மற்ற பயணிகளை வேடிக்கை பார்த்தேன். பூர்ணம் விஷ்வநாதன் போல ஒரு வெள்ளைக்காரர். ரோஜர் மூரின் பெரியப்பா போல இன்னொரு வெள்ளைக்காரர்.பிரகாசத்தில் சூரியனை மிஞ்சும் நம்ம ஊரு வழுக்கை. 
5) ஒன்று புரிந்தது. நம்ம நாட்டவர்களை விட மற்ற நாட்டினர் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள்,குறிப்பாக இங்கிலாந்து நாட்டவர்.