எனது சமீபத்து அமெரிக்கப் பயணத்தைக் குறித்து ஒரு தொடர் எழுதும் எண்ணம் தற்செயலாக உதித்தது.
1) நீங்கள் உங்கள் பயணத்திற்குத் தயாராக ஒரு செக் லிஸ்டைப் பயன்படுத்தி , ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொண்டவுடன் ஒரு பேனாவினால் டிக் செய்கிறீர்கள் என்றால்...செக் லிஸ்டின் கடைசியில் பேனாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏர்ப்போர்ட் வந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ்காரி இம்மிக்ரேஷன் ஃபார்ம் கொடுத்தா ஃபில் பண்ண...ஏர்ப்போர்ட்டில பல பெண்கள்..ஆனால் என்னிடம் நோ பென்.நூறு ரூபாய் கொடுத்து பார்க்கர் பேனா ஒன்று வாங்கினேன்.
2) ஏர்ப்போர்ட்டில் ஏன் பலருக்குப் பசிப்பதில்லை என்று புரிந்தது. கீழே உள்ள விலைப்பட்டியைப் பாருங்கள்.
சாண்ட்விச் - ரூ.100
உருளைக் கிழங்கு போண்டா - ரூ. 60
பர்கர் - ரூ.60
காபி - ரூ.35
3) லண்டன் ஃபிளைட் அதிகாலை 4 மணிக்கு. நள்ளிரவு 12 மணிக்கே ஏர்ப்போர்ட் வந்து சேர்ந்து.. திருவிழாவில் தொலைந்த பையன் போல அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தேன்.
4) மற்ற பயணிகளை வேடிக்கை பார்த்தேன். பூர்ணம் விஷ்வநாதன் போல ஒரு வெள்ளைக்காரர். ரோஜர் மூரின் பெரியப்பா போல இன்னொரு வெள்ளைக்காரர்.பிரகாசத்தில் சூரியனை மிஞ்சும் நம்ம ஊரு வழுக்கை.
5) ஒன்று புரிந்தது. நம்ம நாட்டவர்களை விட மற்ற நாட்டினர் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள்,குறிப்பாக இங்கிலாந்து நாட்டவர்.
haha arumaya solirikinga !
ReplyDeletenandri Deepak
ReplyDeleteஇன்னும் நிறைய ......
ReplyDeleteநன்றி. தொடர்ச்சி பாகங்களில் நீங்கள் கேட்ட 'இன்னும் நிறைய' வருகிறது,ஜீவானந்தம்.
ReplyDeleteliked your post. But there is a formal tone in the tamil posts which doesn't go well.
ReplyDeleteBy the way, did you do standup comedy in chennai Indiblogger meet?
id the video there in youtube?
yes,I performed in indiblogger meet. no the video is not available. planning to include jokes,mimicry videos in my blog later.
ReplyDeletesuperappu
ReplyDeleteNandri Lali !!
Delete