Wednesday, August 31, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 14

 




தேடல்
ஞானம் கூட
இப்போது 
போதி மரத்தடியில்
தேடப்படுவதில்லை!
கூகுலில் தேடப்படுகிறது!

இலவசம்
பூங்காவில் அதிகாலை
இலவச யோகா வகுப்பு!
தொடக்கத்திலிருந்த கூட்டம்
காலத்தில் குறைந்து
யோகியின் உடல் போல்
மெலிந்து விட்டது.
எல்லா இலவசங்களும்
தேர்தல் இலவசங்கள் போலக் கவர்வதில்லை!!



அலாரம்
வேலை நாளில்
அடிக்கும் அலாரத்தை
அடித்து  நிறுத்தலாம்.
 தொடர்ந்து தூங்கலாம்.
அடுத்து மனதில்
விட்டு விட்டு ஒலிக்கும்
அலாரங்களை நிறுத்த
 முடியாது எழுந்திருக்கலாம்.
விடுமுறை நாள்
                       காலையில் 
எப்போதும் போல்,
மறதியில் 
அடிக்கும் அலாரம்!
அன்று அது  இசை!
இம்சை அல்ல!

அலாரங்கள்
காலத்தோடு மாறிவிட்டன!
அவைகள் எழுப்பும்
மனிதர்களின் எதிர்வினைகள்
மாறுவதில்லை!

காலை நடைபாதையில்
இட்லிக் கடை போடும் ஆயாக்கள்
அலாரம் வைத்து
அதிகாலை எழுவதில்லை!
எழத் தாமதமானால்
எழும் பின்விளைவுகள்
உடற்கடிகாரத்தின்
அலாரத்தை அடிக்கவைக்கிறது.


Sunday, August 21, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 13

சுதந்திரம்
சுதந்திர நாட்டில் பல அடிமைகள்!
புகைக்கு.
மதுவிற்கு.
போதைக்கு.
சூதாட்டத்திற்கு.
வெளியே சுதந்திரம்...
  ஆனால் உள்ளே?





பரிமாற்றங்கள்
முத்தம் தந்து 
கொசு ரத்தம் 
எடுக்கிறது!


 
காற்றை வாங்கி 
பலூன் சந்தோசம்
தருகிறது!


 
தூசி
தூசி படுவது 
புத்தகத்தில் அல்ல. .
அறிவில்!



சுய உணர்வு
நீ 
உன்னை உணராவிடில்
உனக்கு நஷ்டம்.

நாம்
நம்மை உணராவிடில் 
நாட்டுக்கு நஷ்டம்.

Saturday, August 13, 2011

My Recent Mobile Clicks

                       





                                        





                            



The URL for the above picassa album is below


My recent mobile clicks