Saturday, August 6, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 11


எங்கேயும் பிளாஸ்டிக்



பைகள்!

குடங்கள்!

இருக்கைகள்!

பொம்மைகள்!

ப்ளாஸ்டிக்
முகங்கள்!

இவையோடு 
மனங்களும்!







பொய் மெய்



நரை விழுந்தால்
சாயம்! 
சுருக்கம் விழுந்தால் ஒப்பனை!
பல் விழுந்தால்
பொய்ப்பல்!
உடம்பின் வயதை
மறைக்க...
மறுக்க...
மறக்கலாம்!
மனதின் வயதை.?



நோக்கம்


நடைபாதை வியாபாரிக்கு
விற்பதில் நோக்கம்!
அப்பாவிற்கு
விலை குறைப்பில் நோக்கம்!
பிள்ளை பொம்மையை நோக்கும்!

2 comments: