சாலை நிறுத்தத்தில்
தொழில்முறை ஓட்டுநர்
ஜன்னல்களின் ஊடே
பச்சை விழும் நேரத்திற்குள்
நண்பரிடம்
நட்பைப் பொழிவர்!
தனித்த இருக்கையில்
நீண்ட தனித்து இருக்கை
தரும் ஏக்கம்!
நேரத்தை மிஞ்சும் நேயம்!
ஒத்தி வைப்புத் தீர்மானம்
வாரக்கடைசிக்கு
ஒத்தி வைக்கப்படும்
சந்தோசங்கள்!
ஏமாற்றத்தோடு
முடியும் வாரங்கள்!

இன்னொரு வாரம்.
நம்மோடு நாம் ஆடும்
கண்ணாமூச்சி!
வாரமல்ல வரம்.
புரிந்தால். . .
தொடக்கத்தில்
தொடங்கும்
சந்தோசம்.
போட்டியின்றி
வாழ்க்கை
ஓட்டப்பந்தயமா?
யாரோடும் போட்டியிட!
யாரையும் வெல்ல!
நேற்றைய உன்னோடு
இன்றைய நீ
போட்டியிட்டால்...
நாளை வெற்றி உனதே!
"வாரமல்ல வரம்" & "நேற்றைய உன்னோடு
ReplyDeleteஇன்றைய நீ
போட்டியிட்டால்...
நாளை வெற்றி உனதே!" Superb!!!
நன்றி மகேந்திரன்!
ReplyDeleteநேரத்தை மிஞ்சும் நேயம்
ReplyDeletearumaya irukku sir
-Deepak
Thanks Deepak
ReplyDelete