வயதாகக் காத்திருப்பதா
மனித வாழ்க்கை?
நேரம் பற்றிச் சிந்திக்க நேரமில்லை!
நேரம் உணரப்படும் நேரங்கள்!
காய்ச்சலில் படுத்த நேரம். . .
மின்வெட்டான நேரம். . .
தோல்வி கண்ட நேரம். . .
மனிதர்கள் நடமாடும் மணற்கடிகாரங்கள்!
மணல் முடிந்தால் நேரமாகாது,..
நேரம் முடிந்தால் மண் போகும் கடிகாரங்கள்!
வருடங்கள், மாதங்கள்,
நிமிடங்கள்,நொடிகள். . .
இத்தனையிருந்தும். . .
நேரம் போவது தெரியவில்லை!
உருவமில்லாதது ஒரு காரணமா?
அன்புக்கும் தான் உருவமில்லை!
நேரம் போவது
தெரியத்தொடங்கினால். .
அது ஞானம் தொடங்கும் நேரம்...
நல்ல நேரம் . . .?
விழிப்புணர்வோடு அனுபவித்த நேரம்!
கெட்ட நேரம் . . .?
விழிப்புணர்வின்றிக் கழிந்த நேரம்!
நேரம் வருகிறதா?
அல்லது போகிறதா?
விடை மனதில்!
'இறந்த' காலத்திற்கு அழாதே!
எதிர்காலத்தை எதிர்பார்க்காதே!
நிகழ்காலம் உனது!. அனுபவி!
No comments:
Post a Comment