ஒரு கம்ப்யூட்டர் சேல்ஸ் ரெப் ஒரு கிராமத்திற்குப் போகிறார் விற்பனைக்கு. வாங்குபவர் ஒரு ஜாக்கிரதையான கரார் மனிதர்.
கம்ப்யூட்டர் வாங்கும்போது நடந்த உரையாடல்!
கம்ப்யூட்டர் வாங்குபவர்: இந்தப் பொட்டி கிட்டி எல்லாம் நல்லா விரிச்சுக் காமிங்க!
சேல்ஸ் ரெப்: (விரித்துக் காட்டுகிறார்!)
வா: இது என்னாது கண்ணாடி இருக்கு ஆனா மொகம் தெரியல!
சே: இது பேர் தான் சார் மானிட்டர் !
வா:இது என்ன சூட் கேஸ், கைல புடிக்க கைப்புடி இல்லாம இருக்கு. தூக்க செரமமா இருக்கும்ல!
சே: இது சி பி யு பாக்ஸ் சார்!
வா: அது சரி! ஏன் நான் கேக்காம டைப் ரைட்டர் கொண்டு வந்தீங்க. எடுத்துட்டு போங்க
சே: சார் இது தான் கீ போர்டு.
வா: அப்ப சரி இருக்கட்டும். பிள்ளைங்களுக்கு எ பி சி டி, ஒன்னு ரெண்டு சொல்லித்தர பயன் படுத்திக்கலாம்!
இங்க ஏன் சூட் கேஸ்ல நீளமா ஓட்ட இருக்கு!
சே: அது சி டி போடறது சார்!
வா: இங்க சொருகினா, எங்க படம் தெரியும், எங்க சத்தம் வரும்.
சே: விவரிக்கிறார்..
வா: எல்லாத்தையும் கலட்டி காமிங்க!
சே: பாக்ஸ் ஓபன் பண்ணி மதர் போர்டை காட்டுகிறார்
வா: இதென்ன கருப்பா, நீள, நீளமா இருக்கு!
சே: சார் இது தான் மெமரி சிப்ஸ்
வா: இது எதுக்கு எனக்கு. எனக்கு மெமரி ரொம்ப இருக்கு. மத்தது இருக்கட்டும் இது வேண்டவே வேண்டாம்!
சே: சார் இது என்னோட விசிடிங் கார்டு. நான் வேலைய விட்டுப் போயிட்டதா எங்க கம்பனிக்கு போன் பண்ணி சொல்லீருங்க!
வாசி ரொம்ப நாழ் கழிச்சி நல்லா சிரிச்சஎன்
ReplyDeleteநன்றி க்ளாடிஸ்!
ReplyDelete