Friday, April 13, 2012

பாடலும் சாயலும் - 6

 'கனா காணும் காலங்கள்... ' பாடல், படம் 7ஜி ரெய்ன்போ காலனி

இது அப்படியே நுனி முதல் அடி வரை 'ஒட்டகத்தக் கட்டிக்கோ' (படம்: ஜென்டில்மேன்) சாயல். தொடக்க இசையிலிருந்தே கவனிக்கலாம். மெட்டிலும் சாயல்கள் உண்டு. கொஞ்சம் பாடலின் பாவம் மட்டும் சோக இழையோடுவதாய் மாற்றமிருக்கிறது.

 'பப்ப பப்பா பப்பபா... ' பாடல், படம் வேட்டை

இது பழைய 'வச்சுக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள' (படம்: நல்லவனுக்கு நல்லவன்) பாடலை ஒத்திருக்கிறது தாளத்திலும் மெட்டிலும்.

  'அஞ்சலை அஞ்சலை... ' பாடல், படம் வாரணம் ஆயிரம்


இது 'குளிச்சா குற்றாலம் கும்பிட்டா பரமசிவம்' (படம்: டூயட்) பாடலில் சோகச் சாயலைப் பூசியது மாதிரியிருக்கிறது.


No comments:

Post a Comment