Sunday, April 15, 2012

சம்பவங்கள் - கையில் கடி/வீணா/ஆப்பிள்/எங்கேஜ்/சண்டை

கையில் கடி

ஒரு நண்பர் என்னை வழியில் பார்த்து இரண்டு நிமிடங்கள் பேசி விட்டுக் கிளம்பினார். திடீரென்று கையில் லேசாகச் சொரிந்தார். என்னாச்சு என்றதற்கு , ஏதோ கடிச்சுருச்சு போலிருக்கு என்றார்.நான் சொன்னேன், "நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கலயே!". நண்பர் ரசித்துச் சிரித்தார்.

வீணா வாசித்தல்

ஆர்கெஸ்ட்ரா குழுவைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடம் வாத்தியம் வாசிப்பவர்கள் யாரையும் புதிதாகச் சேர்த்தீர்களா என்றேன். அவர் ஒரு பெண் வீணா வாசிப்பதற்கு ஆர்வம் காண்பித்ததாகச் சொன்னார். பள்ளி நாட்களில் வீணா பழகினாராம், இப்போது பயனளிக்கிறது என்றார். நான் சொன்னது, "அவர் வீணா பழகுனது வீணாப் போகல!"

ஆப்பிள் பை

நண்பர்களுடன் ஒரு கடையில் சாப்பிடச் சென்ற போது, ஒருவர் ஆப்பிள் பை
(Apple Pie) சாப்பிடலாம் என்றார். இன்னொருவர் ஆப்பிள் பையில் எல்லாம் இருக்கும் ஆப்பிள் மட்டும் இருக்காது என்றார். நான் சொன்னது, "அப்ப அது ஆப்பிள் பொய்!"

எங்கேஜ்

நண்பர் ஒருவர் இந்த வருடத் தொடக்கத்தில், 'எங்கேஜ்' என்ற பெயரில் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையா என்று கேட்டார். என் பதில்," அது 'யங் ஏஜ்' உள்ளவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி!"

சண்டை போடுதல்

வீட்டில் என் இரண்டு மகன்களும் பிஎஸ்2வில் கேம் ஆடிக்கொண்டிருந்தார்கள். நான் அங்கு சென்று பார்த்த போது ஒருவன் விளையாடுகிறான் மற்றவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று நினைத்தேன். ஆனால் அது அமைதிக்கான தருணமில்லை. இரண்டு பேரிடமும் ஜாய் ஸ்டிக் இருந்தது.திரையில் குங்க்ஃபூ சண்டை நடந்து கொண்டிருந்தது. நான் கேட்டேன், " ஓ, ரெண்டு பேரும் சண்ட போட்ரீங்களா?" என்றேன். பெரியவன் சொன்னான்,"ஆமா, சண்ட போடாம, சண்ட போட்றோம்."

3 comments:

  1. கண்டேன் பழைய நண்பனை ! ! நான் யாரென்று ஊகிக்க முடியுதா ?

    ReplyDelete
  2. நீ என் கூடப் படிச்சியா, நான் உன் கூடப் படிச்சேனான்னு மறந்திருச்சு! :) Pl. click the FB at the bottom of the home page. Let us connect thru' FB.

    ReplyDelete
    Replies
    1. ha ha ! yes you got it. Yes we will connect through Facebook. Met Suresh at his place recently and he told me about your blog.

      Delete