Sunday, February 27, 2011

கவிதை - அலைகள்

அலைகள்


கடல் அலைகள்..

கண்டன பல வலைகள்..
செய்தன பல கொலைகள்..



தன் முயற்சியில் சற்றும் தளரா 
விக்கிரமாதித்தன்கள்..
நாமும் ஒரு நாள் கரையேருவோம்
என நாளும் முயலும் இளைஞர்கள்.
இந்தியா போல் முன்னேறும் இவை,
பின்னே செல்வது சுனாமியைச் சுட்டிக் காட்ட...


ஓசியில் ஒரு ஒலியும் ஒளியும்..
கொஞ்சம் நிலவை அலைகள் கூட்டமாய் ரசிக்கும்..
முழு நிலாவாய் ஆனவுடன் கட்டுப்பாடு
கலைந்து ஆர்ப்பாட்டம் ஆர்ப்பரிப்பு.. 

கடலின் ஆழம் தெரிந்ததால் காலை
விடாமல் மேலெந்தவாரி மேதாவிகள்..
கரையைத் தொட நீங்கள் விளையாடும்
ஓரணிக் கபடியால் எங்கள் கால்கள் நனைகிறது...


நீரால் அலைகள் வரும்..
அலைகளால் நீரும் வரும்.
ஓய்ந்து போன மனிதனுக்கும்
உங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால்
ஓயாது உழைக்க உத்வேகம் வரும்.
முட்டாள்கள் உங்களிடம் 
சாகக் கற்றுக் கொள்வார்கள்...
மற்றவர்கள் உங்களிடம் 
வாழக்கற்றுக் கொள்வார்கள்..

Cartoons - Beggars / Tonic / World Bank

Cartoons drawn by me and sent for a competition (year 1993) - 3 pictures


1)The economic policy which was framed by the then FM(Man mohan singh) and PM(Narasimha rao) is commented by one beggar to another. 
The caption is - " I think the dual exchange rate, partial convertibility, 5 kilos gold etc, will definitely improve OUR economy"
2) The economic policy favored the Rich people a lot. 
3) The world bank had lot of influence on the economic policy. Notice who is in the needle. 
Thanks to my friend Vishwanathan who helped in scanning the cartoons

சம்பவங்கள் - அர்னால்ட்/க்வாலிட்டி/ட்ரெய்னிங் ஆன் ட்ரெய்னிங்

 அர்னால்ட்
இரண்டு நண்பர்களுடன் ஒரு ரெஸ்டாரண்டில் சமோசா சாப்பிட்டேன். சமோசா சாப்பிட்டு முடித்த போது, ஒரு கப் நிறைய சாஸ் மிச்சமிருந்தது. 'இவ்வளவு மிச்சமாயிருச்சே' என்றேன். ஒரு நண்பர் டோன்ட் ஒர்ரி என்று சொல்லிவிட்டு ஒரு விரலால் மூன்று முறை சாஸ் கப்பில் தொட்டு நக்கினார். மின்னல் வேகத்தில் சாஸ் காலியானது. அந்த வேகத்தைப் பார்த்து நான் அதிர்ந்து போய் சொன்னது, 'நீங்க தான் அர்னால்ட் சாஸ் நக்கர்'.

க்வாலிட்டி 
என்னுடைய முன்னாள் கம்பெனியில் ஒரு நாள், க்வாலிட்டி பற்றி ஒரு இன்டெர்னல் ட்ரெய்னிங் நடந்து கொண்டிருந்தது. ட்ரெய்னிங் எடுத்தவர் முன் வரிசையிலிருந்த ஒரு அழகான இளம்பெண்ணிடம் பத்து நிமிடம் கேனைன் ஸ்பீஸீஸ்( Canine Species) பற்றி பேசிக்கொண்டிருந்தார். எல்லோரும் கடுப்பில் நெளிந்து கொண்டிருந்தனர். க்வாலிட்டி ட்ரெய்னிங்கில் நாய் பூனைக்கு என்ன வேலை.அப்படியே இருந்தாலும் அதை எல்லோரிடமும் சொன்னாலும் பரவாயில்லை. அவர்கள் பேச்சு நாய் பூனையிலிருந்து யானைக்கு மாறியது.
அப்பாடா பேச்சை மாற்றினார்கள் என்ற நிலைமை. ட்ரெய்னிங் எடுத்தவர் மற்றவர்களையும் எங்கேஜ் பண்ண நினைத்து (கில்டி பீலிங்கு!) 'Do you know the difference between Indian and African elephant?' என்று கேட்டார். நான் விரக்தியான   குரலில் 'Nationality' என்று சத்தமாகச் சொன்னேன். அத்தனை பேரின் அடக்கி வைத்த சலிப்பு சிரிப்பாக வெடித்தது.
    அதன் பிறகு க்வாலிட்டி ட்ரெய்னிங் நல்ல முறையில் தொடர்ந்தது.

ட்ரெய்னிங் ஆன் ட்ரெய்னிங்
இதுவும் என் முன்னாள் கம்பெனியில் நடந்த சம்பவம்.
பெங்களூரிலிருந்து ஒருவர் வந்து ஹொவ் டு ட்ரெய்ன் என்று நான்கு நாட்கள் வகுப்பெடுத்தார். அப்போதெல்லாம் ஓஹெச்பி (ஓவர் ஹெட் ப்ரொஜக்டர்) பயன்படுத்தி அதில் ட்ரான்ஸ்ஃபரன்ஸி ஷீட்ஸ் (ஃபாயில்) வைத்து ஸ்கீரில் ப்ரொஜக்ட் செய்வார்கள். முன் வரிசையில் இருப்பவர்களுக்கு ஓஹெச்பி சூடும் அதில் வரும் கெட்ட கெமிக்கல் வாடையும் ஃப்ரீ. 
மூன்றாம் நாள், வகுப்பில் ட்ரெய்னர் ஒரு ஃபாயிலை ப்ரொஜக்ட் செய்து தன் கையிலிருந்த குச்சியால் ஒவ்வொரு வார்த்தையாகச் சுட்டிக் காண்பித்தபடி முதல் வரியைப் படித்தார். அவர் படித்த வரி...
'Do not read from the foil'

Sunday, February 20, 2011

Robin Sharma - Author of the Monk who sold his Ferrari

Listened to an interview of Robin Sharma in a magazine's CD. The following are the excerpts from that. 

The 3 things Robin sharma's father told him when he was young
  'always dreaming','always learning' and
  'take a cause larger than you and work for it'

'The Monk who sold his Ferrari' was sold 3 million copies.It was self published,his mother edited and his father sold it at the back of his car.His first speech was attended by 22 people, 21 of them were his relatives.People laughed what a lawyer know about leadership

Every employee should think like a CEO 


Robin Sharma talks about big five things one should try to achieve and progress constantly
showing innovation
being ethical
driving positive change
leaving people  better than you found them
being the most positive person

He also talks about five small daily goals, to reach the big five.

One lady asked Picassa to draw her. Picasso drew her picture in a paper and gave it to her.
She thanked and started walking away. Picasso called her and said she should pay a million dollor. The lady told 'you just drew for
30 seconds,how can it worth million dollors'. Picasso replied 'It took 30 years to draw that picture in 30 seconds'. 


One famous comedian advised a budding comedian 'Be so good at what you do so that people can't ignore you'

Doing same things everyday develops a sense of complacency.
Spend time with people who see the world differently. e.g. teaching kids something
Don't worry about what other people think
get reinspired everyday by being alone, by meditating, reading good magazines etc. 

We are caught by the things that frighten us
running away from discomfort is running away from growth
you need to be great person to be a great leader
 you can't lead other persons if you can't lead you
you be the change that you want to see in the world - Gandhi


 http://www.robinsharma.com/blog/09/robins-73-best-business-and-success-lessons/


Check the Video log of Robin Sharma in youtube,his speech style is convincing with amazing clarity 
Getting more done in less time
http://www.youtube.com/watch?v=aEAquu4p0TU

 Thanks to my colleague Krish for sharing the magazine which featured Robin Sharma's speech

Wednesday, February 16, 2011

புதுமையான (!?) பெயர்கள் ... வாசகங்கள்...

அலுவலகம் செல்லும் வழியில் பழைய மகாபலிபுரச் சாலையில் (சென்னை ) ஒரு உணவு விடுதியைப் பார்த்தேன்.
வெள்ளைக்காரத்தனமான பெயர்.. கீழே உயர்தர சைவ உணவகம் என்று போட்டிருந்தது.
பெயருக்கும் வாசகத்துக்கும் சம்பந்தமில்லாமல் இருந்ததால், இது போன்ற சில  பெயர்களும் வாசகங்களும் என் கற்பனையில் ஓடின.
( படிப்பவர்களில் சொந்தமாய் வண்டி ஓட்டுபவர்கள் அலுவலகம் செல்லும் போது இது போலக் கற்பனை செய்ய வேண்டாம். நான் சென்று கொண்டிருந்த பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தது நானில்லை.)

1) தொடக்கறி
     உயர்தர சைவ உணவகம்
2) வழுக்கை 
     நவீன முடி திருத்தும் நிலையம்

3)  மயானா
     மல்டி ஸ்பெஸாலிடி ஹாஸ்பிடல்
4)  மக்கு மண்ணாங்கட்டி
   ஆல் பாஸ் ட்யூசன் சென்டர்
5)  போண்டி
     நகரின் நம்பகமான ஃபினான்ஸ் நிறுவனம்
6)  கைநாட்டு வித்யாஸ்ரம்
    உயரிய கல்வி நிறுவனம்
7) அழுமூஞ்சி
    அழுக்குக்கு அழகு சேர்க்கும் அழகு நிலையம் 
8) பல்லாங்குழி
     அதி நவீன பல் மருத்துவமனை. இங்கு உங்கள் செலவில் உங்கள் பல்லைத் தட்டிக் கையில் கொடுக்கப்படும்.
9) திருட்டு முழி
    சூப்பர் செக்யூரிட்டி நிறுவனம்.
10) டைவர்ஸ்
     திருமண வரன் ப்ரோக்கர்ஸ்
(எங்களிடம் திருமணம் செய்து கொண்டால் விவாகரத்து இலவசமாக முடித்துக் கொடுக்கப்படும். )


இது போன்ற புதுமையான(!?) பெயர்கள் மற்றும் வாசகங்கள் வரவேற்கப்படுகின்றன...

Wednesday, February 9, 2011

சம்பவங்கள் - நட்டுவாக்களி/கொலக்கேசியா/பள்ளி அறை

நட்டுவாக்களி நாச்சிமுத்து 

காலம்: பிளஸ் 2 
நேரம்: இரவு 12 மணி 
கையில்: குமுதம் - படித்த பகுதி: நட்டுவாக்களி நாச்சிமுத்து 
நட்டுவாக்களி என்றால் என்ன என்று, அன்று அப்போது தெரியாது. படித்து விட்டுக் குமுதத்தை வைத்து விட்டு,
படுக்கப் பாய் விரித்தேன். திடீரென்று தரையில், தேள்களின் உலகில் அர்னால்ட் போல ஒரு மொக்க (மதுரை வழக்கில் பெரிது என்று பொருள்,சென்னை வழக்கு அல்ல) தேள் என்னை நோக்கி ஓடி வந்தது. எனக்கு Hand and Leg no run (தமிழ்ப் படுத்திக்கொள்ளவும்). என்ன செய்வது என்று புரியாமல்,no sin for danger,தலையணையை அதன் மேலே போட்டேன். தலையணை மேல் ஏறி நின்று பரதம், tap டான்ஸ் கலந்த ஸ்டைலில் ஒரு இன்ச் விடாமல் மிதித்தேன். "உஷ். அbba" என்று தலையணையைத் தூக்கினால்... ஜேம்ஸ் பாண்ட் ஸீன் கானரி வெற்றுடம்பாய் குப்புறப்படுத்திருக்க,  
அழகான ரஷ்யன் பெண் உளவாளி 2 பீஸ் உடையில், கால்களால் பாண்ட் முதுகில் மசாஜ் செய்தபின் பாண்ட் புத்துணர்ச்சியுடன் எழுவானே... அந்த வேகத்தில் அந்த அர்னால்ட்  தேள் தெம்பாக ஓடத்தொடங்கியது!ஆத்திரமும் அவமானமும் பொங்க, "நீ இல்லங்கில் ஞான்" என்ற வெறியுடன் பாயைத்தூக்கி அதன் மேல் போட்டு, என்டர் தி டிராகன் ப்ரூஸ் லீ ஸ்டைலில் ஒரு ஜம்ப் அடித்து (but no oOO sound),பாயில் மிதித்து என் எதிரியைக் கொன்றேன். 
மறுநாள் காலை அர்னால்ட் தேள் தான் நட்டுவாக்களி என்று அழைக்கப்படுவதாய் தெரிந்தது.

பள்ளி அறை (?!)



மதுரையில் LKG படிக்கும் போதும், என்னோட பெஞ்ச் லாஸ்ட் தான். சுவற்றுக்கும் அந்த பெஞ்சுக்கும் இடையே ஒரு பையன் படுக்கும் அளவு இடைவெளி. ஒரு மதியம் எனக்குத் தூக்கம் வந்தது! பக்கத்தில் இருந்த பையனிடம் என் பையை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, அந்த இடைவெளியில் படுத்துத் தூங்கிப்போனேன்!முழிச்சுப் பார்த்தால் ஒருபக்கியையும் காணல! படியில் கீழே வந்து பார்த்தால் கீழ் கிளாசும் காலி. அதாவது மொத்த ஸ்கூலும் காலி! ஷட்டர் கேட் பக்கத்தில நின்னு அழுது கிட்ருந்தேன்.எங்கப்பா சைக்கிளில் தேடி வந்தார். ஷட்டர் கேட்ல எவண்டா கேப் வச்சு டிசைன் பண்ணான்னு நொந்து போனேன். கேப்ல கை விட்டு எங்கப்பா மொத்தினார். அந்த வயசுல வாட்ச்மேன் வீடு எதிர்வீடுன்னு அப்பா கேட்ட G.K கேள்விக்கு விடை சொன்னேன். அப்புறம்... வாட்ச்மேன், சாவி, கதவு திறப்பு. மீண்டும் மொத்து. சைக்கிள் பாரில் ஒக்கார்ந்து போறது கீழே ஒரு கொடுமை. அதே நேரத்தில மேலிருந்து மொத்து டபுள் கொடுமை!அதன் பிறகு இன்று வரை மதிய நேரத்தில் வீட்டைத் தவிர எங்குமே என் கண் அசருவதில்லை! எவ்வளவு களைப்பா இருந்தாலும்! 




கொலக்கேசியா ஆண்ட்டிகோரம்




படிக்கும் காலத்தில் நான் பாட்டனி டெர்ம்சை நன்றாக ஞாபகம் வைத்திருப்பேன். ஒரு நாள், வகுப்பு இடைவேளை நேரத்தில், மூன்று நண்பர்கள் ”எப்படி நீ இப்படி ஞாபகம் வைத்திருக்கிறாய்” என்று கேட்டார்கள். “சொல்றேன்.ஆனா கொஞ்சம் பயமாக இருக்கும் பரவாயில்லையா?” என்றேன். மூவரும் "பரவாயில்லை சொல்லு" என்றனர். "ஒரு எக்சாம்பில் சொல்றேன். சேனைக்கிழங்குக்கு பாட்டனி டெர்ம் கொலக்கேசியா ஆண்ட்டிகோரம்(colocasia antiquorum).இதை ஞாபகம் வச்சுக்க ஒரு கதை இருக்கு”. மூவரும் “ம்” கொட்டினர். “ஒரு தெருவில கூட்டமா இருக்கு. ஒரு ஆள் என்ன இங்க கூட்டம்னு கேக்கிறார். அப்ப இன்னொரு ஆளு சொல்றாரு.


’கொலக்கேசியா.ஆன்ட்டிய கோரமா கொன்னுட்டாங்க!” ”ஞாபக வக்கிற டிப்ஸ் கேட்ட மூணு பேரும் ஒரு லெவலாயிட்டாங்க.

கவிதைகள் - குறட்டை & டிஜிட்டல் கேமரா & பொறாமை

குறட்டை
சின்ன வயதிலிருந்து
நான் கேட்ட
குறட்டை ஒலிகள் 
பிடிக்கவில்லை எனக்கு!
இப்போது
நான் விடுவதாய்க் 
குடும்பம் சொல்கிறது.
நான் கேட்காத
என் குறட்டை ஒலி
பிடிக்கிறது எனக்கு!

டிஜிட்டல் கேமரா
சிறுவன் எடுத்த  படங்கள்
விதம் விதமாய்.
எடுத்தது தந்தை பரிசளித்த 
டிஜிட்டல் கேமராவால்.
பெரும்பாலான படங்களில்
அவன் தந்தை இல்லை.
அவரோ வெளிநாட்டில்....

பொறாமை
பிச்சைக்காரன் - உட்கார்ந்த இடத்திலேயே
சம்பாதிக்கிறானே!
ட்ராஃபிக் போலீஸ் - நின்ன இடத்திலேயே
சம்பாதிக்கிறாரே!
கேட் வாக் மாடல் - நடந்தபடியே
சம்பாதிக்கிறாளே!
இப்படிக்கூடப் பொறாமைகள்! 
இவர்கள் பொறாமையைப் பார்த்துப்
பொறாமையாய் இருக்கிறது!
இவர்களால் மட்டும் எப்படி இப்படிப்
பொறாமைப் பட முடிகிறதென்று!






Monday, February 7, 2011

Frozen thoughts.. (let me do justice to the second half of my blog title)


Frozen thoughts is a monthly magazine published from Chennai. I didn’t think a magazine from Chennai will beat Readers Digest and reach the first place i.e. my favorite magazine. Suggesting to subscribe for more peace of mind. 

The editor of that magazine runs an organization for the improvement of society. When checking the frozen thoughts web site, found the Alma mater site and found that they broadcast the editor’s speech live on Sundays 7AM to 9AM

T.T.Rangarajan's speech is broadcasted on Headlines today on Saturdays from 6.45AM to 7AM. It is titled 52 Thoughts. On 2/4/2011, it was the 5th episode

Those who miss that can check for frozen thoughts in you tube. The editor’s speech is in good English, given without any notes, no searching for, what is that word, mmm.. ya.. words. The points spoken may be known but the way they are told is just great. 

Below are the excerpts from one such speech.

There is no way to happiness, happiness is the way
Great things have been done after 30 e.g Gandhi, Theresa Vivekananda (Chicago speech)

 Whatever happens happens for good.How it applies to Tsunami. If the tsunami had attacked in the evening the casualty would be very high.

If love cannot nothing else can
you can't fight with your spouse and create a great marriage
you can't kill your competition and create a great organization

get your magnet right
when your magnet attracts hatred you repel love
you celebrate the success of other person, you attract success
when you are upset for 30min you lose your life for 30min
you take no action to fulfill your desire, your magnet repels the desire
you desire health, but not willing to exercise or have right food habit, you repel health

2 category of people , those who feel they are on top of world and those who feel the world is on their top
that which you invest time, grows
happy family - invest time and communication
Inadequacy of knowledge and skills
We move from 'everything of me nothing of Him' to 'everything of Him and nothing of me'

forget yourself for a few minutes every day i.e. meditation

Thomas alva edison considered the outcome of his experiments as only feedback and not results
When his building met with a fire accident and all the research findings were burnt, he told his son, “all my mistakes are getting burnt”
Somebody asked him, you are a famous scientist and how can you fail 9999 times. He said they are not failures. I found out 9999 ways not to build a bulb

Don't justify hatred it is a waste .   
have you heard of being happily angry or peacefully hate

One story. One guru and his sishya returned to their hut after traveling for a long time.
Half of the roof was damaged in the house. The guru said “lord your ways are your ways, you know we need good ventilation”. At night the sishya couldn’t sleep staring at the sky. He complained to the guru about that. Guru said, “lord your ways are your ways, you know staring the stars will help us in falling asleep fast”. Suddenly it started raining and they came out. Sishya said,”we are suffering in the rain”. Guru said,” “lord your ways are your ways, you know we didn’t take bath for a long time”.
The sishya got fed up with the guru. He asked the Guru why he is not complaining and always thankful to the lord. The Guru said,”I don’t even know whether god is there.I don’t even know to whom I am saying this,but my approach is making me happy”