Sunday, February 27, 2011

கவிதை - அலைகள்

அலைகள்


கடல் அலைகள்..

கண்டன பல வலைகள்..
செய்தன பல கொலைகள்..



தன் முயற்சியில் சற்றும் தளரா 
விக்கிரமாதித்தன்கள்..
நாமும் ஒரு நாள் கரையேருவோம்
என நாளும் முயலும் இளைஞர்கள்.
இந்தியா போல் முன்னேறும் இவை,
பின்னே செல்வது சுனாமியைச் சுட்டிக் காட்ட...


ஓசியில் ஒரு ஒலியும் ஒளியும்..
கொஞ்சம் நிலவை அலைகள் கூட்டமாய் ரசிக்கும்..
முழு நிலாவாய் ஆனவுடன் கட்டுப்பாடு
கலைந்து ஆர்ப்பாட்டம் ஆர்ப்பரிப்பு.. 

கடலின் ஆழம் தெரிந்ததால் காலை
விடாமல் மேலெந்தவாரி மேதாவிகள்..
கரையைத் தொட நீங்கள் விளையாடும்
ஓரணிக் கபடியால் எங்கள் கால்கள் நனைகிறது...


நீரால் அலைகள் வரும்..
அலைகளால் நீரும் வரும்.
ஓய்ந்து போன மனிதனுக்கும்
உங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால்
ஓயாது உழைக்க உத்வேகம் வரும்.
முட்டாள்கள் உங்களிடம் 
சாகக் கற்றுக் கொள்வார்கள்...
மற்றவர்கள் உங்களிடம் 
வாழக்கற்றுக் கொள்வார்கள்..

No comments:

Post a Comment