Saturday, March 12, 2011

கவிதை - சைக்கிள்

சைக்கிள்
சின்ன சைக்கிள்!
அரை மணி/ஒரு மணி 
நேர வாடகைக்கு
நான் கற்றுத்தரச்சொன்ன நண்பன்
ஓசியில் ஓட்டினான்
என்னைப் பின் ஓட விட்டான்
அதன் பின் அப்பா வந்தார் 
சொல்லித்தர!
அப்பா பிடித்துக்கொள்ள
பெடல் மிதிக்க
விழும் பயத்தில்
கை நடுங்க
வாய் கோண
சில விழுதல்களுக்குப்பின்
திரும்பிப் பார்த்தால்
அப்பா தூரத்தில்!
நான் ஓட்டப்பழகி விட்டேன்
அடடா அந்த அனுபவம்
மீண்டும் நான் சைக்கிள் 
பழக வேண்டும்.
முடியுமா?  

No comments:

Post a Comment