Sunday, March 13, 2011

சம்பவங்கள் - மூட்டைப்பூச்சி / நெய் ஊத்தாப்பா/மரியாதை

மூட்டைப்பூச்சி
    கல்லூரியில் பணி புரிந்த போது இரண்டு வருடங்கள் விடுதி வாசம் முடிந்து,  நான் ஶ்ரீவில்லிபுத்தூர் வந்து விட்டேன். தங்கம் லாட்ஜ் எதிரே ஒரு அறையில் தங்கியிருந்தேன். என்னுடன் எட்வர்டும், மணிகண்டனும் வந்து தங்கினார்கள்.
அந்த அறையில் மூட்டைப்பூச்சித் தொல்லை பெருங்கொடுமையாக இருந்தது.
மூன்று பேர் படுக்குமளவு தங்கும் அறை, ஒரு அட்டாச்ட் பாத் ரூம் அவ்வளவு தான். முதலில் ரூம் பிடித்ததால் நான் பூர்வீகக் குடிமகனாக ஸ்ட்ராடஜிக் பொசிஷனில் நடுவில் படுத்திருப்பேன். எட்வர்டும், மணிகண்டனும் எனக்கு அரண்களாக என் இரண்டு புறத்திலும் இருந்து என்னை மூட்டைப் பூச்சியிடமிருந்து காத்துக் கொண்டிருந்தனர்.
   ஒரு நாள் இரவு நான் மட்டும் தனியே இருந்தேன். மூட்டைப் பூச்சிகளின் பழக்க வழக்கங்களை  சிறிது நேரம் கவனித்தேன். மறு நாள் எட்வர்டும் மணிகண்டனும் வந்து விட்டார்கள். இரவு நான் என் அப்சர்வேஷன்களைச் சொன்னேன். 'விளக்கு எரியும் போது வெளிய வரக் கூடாதுங்கிறத அதுக ரூல் போல ஃபாலோ பண்ணுதுக.' அப்போது விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஆனாலும் ஒரு மூட்டைப்பூச்சி வெளியே வந்தது. அதை நசுக்கும் போது மணிகண்டன் சொன்னது,' ரூல ஃபாலோ பண்ணாத மூட்டைப்பூச்சி அவுட்'
   மூட்டைப்பூச்சியை ஒழிக்க நாங்கள் திட்டம் தீட்டினோம். வயக்காட்டிற்கு அடிக்கும் மருந்தை ரூமில் அடிக்க முடிவானது. அந்த வாரக்கடைசியில் நான் ஊருக்குப் போய் விட்டேன். திங்களன்று காலை ஊர் திரும்பி ரூமிற்குச் சென்றேன். ரூமில் ஒரே மருந்து வாடை. முதுகில் மாட்டிக் கொண்டு  அடிக்கும் கருவியை வைத்து அடிக்க ஒரு ஆளை வாடகைக்கமர்த்தி அடித்ததாக எட்வர்டும்,மணிகண்டனும் பெருமையோடும்,மூட்டைப்பூச்சிகள் ஒழிந்த நிம்மதியோடும் சொன்னார்கள். நான் கேட்டுக் கொண்டே தலை சீவிக் கொண்டிருந்த போது, அறையின் ஓரத்தில் இரண்டு துணி மூட்டைகள் இருந்ததைப் பார்த்து, இயல்பாகக் கேட்டேன், 'இதென்ன மூட்டை?' என்று. எட்வர்டும், மணிகண்டனும் அதிர்ந்து போய்,மூட்டைப்பூச்சி என்று நினைத்து, 'எங்க?' என்று பயத்தோடு என்னைப் பார்த்தனர். நான் துணி மூட்டையைக் காட்டியதும் 'ஓ! இதுவா' என்று பயம் தெளிந்தார்கள். அவர்கள் முகத்தில் காட்டிய அதிர்ச்சியை எந்த சினிமாவிலும் எந்த நடிகரும் காட்டவில்லை இதுவரை.
  நெய் ஊத்தாப்பா
 கல்லூரியில் உடன் பணி புரிந்த ஒருவரின் பெயர் ஹரிஹரன். கேரளாவைச் சேர்ந்தவர். நாங்கள் வழக்கமாக அக்கவுண்ட் வைத்துச் சாப்பிடும் கடைக்கு, மாலை நேரம் அவர் தனியே சென்றிருக்கிறார். இட்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நெய் ஊத்தாப்பம் சொல்ல நினைத்து 'நெய் ஊத்தாப்பா' என்று சொல்லியிருக்கிறார்.பிற மாநிலத்தில் தமிழ்நாட்டு உணவுகள் பெயர் மாற்றம் செய்யப்படும். வடா, தோசா போல. என்னடா இது இட்லிக்கு நெய் ஊத்தச் சொல்கிறாரே என்று நினைத்து ரெகுலர் கஷ்டமரை திருப்தி படுத்த சர்வர் நெய் கொண்டு வந்து இட்லி மேல் ஊற்ற... அதைப் பார்த்து விட்டு ஹரிஹரன் டென்ஷனாகி  'நெய் ஊத்தாப்பா' என்று பிட்ச் உயர்த்திச் சொல்ல... சர்வர் மேலும் இரண்டு ஸ்பூன் ஊற்ற... நல்ல வேளை, அப்போது இன்னொரு நண்பர் வந்து எடுத்துச் சொன்னதால் ஹரிஹரனுக்கு நெய் ஊத்தாப்பம் கிடைத்து. இல்லையென்றால் அன்று நெய் அபிஷேகமே நடந்திருக்கும்.
தமிழ் மரியாதை
கல்லூரியில் அட்மின் பிரிவில் ஒருவர் பணிபுரிந்தார். அவர் கேரளாவைச் சேர்ந்தவர். தமிழ் ஓரளவு நன்றாகப் பேசுவார் சில தவறுகள் தவிர. அதில் ஒன்று மரியாதை வழக்கு. நான் ஒரு நாள் ஒரு லேப் ஒன்றினுள் செல்லப் போன போது, அதன் வாசலில் இருந்த ஒரு ஸ்டாஃபிடம் அட்மின் அதிகாரி கேட்டார்,'உங்க HOD இருக்கானா?'. கேள்வி கேட்ட அவரும், அந்த HODயும் சிறு வயதில் ஒன்றாகக் கோலி விளையாடியவர்களில்லை. பின்னர் அவர் லேப்பினுள் சென்றார். நானும் உள்ளே சென்றேன். அட்மின் அதிகாரி அங்கிருந்த டேபிள் ஒன்றையும் சேர் ஒன்றையும் தொட்டுப் பார்த்துவிட்டு லேப்பில் இருந்த ஒருவரிடம் சொன்னார்.' டேபிள் சேர் எல்லாம் தூசியா இருக்காங்க!' . ஒரே நேரத்தில் அவரின் இந்த இரண்டு தவறுகளையும் கேட்க வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ந்தேன். இந்த போஸ்ட் போடக் கருத்து கொடுத்த அவருக்கு நன்றி.

6 comments:

  1. அய்யா,

    வணக்கம். மூட்டை பூச்சிமாதிரியே கடிச்சு சிரிக்கவச்சுட்டேங்க.
    ஞாபகம் வர ஆரம்பிச்சிடுச்சு........

    இப்படிக்கு
    உங்க பக்கத்துக்கு ரூம்மேட்

    ReplyDelete
  2. நன்றி சுரேஷ்! இங்கு மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்திய மாதிரி என்று பழமொழி சொல்கிறோம். நீங்கள் இருக்கும் நாட்டில் Pest Control அதைச் செய்தே விடுவார்கள். டிவியில் பார்த்தேன். ஒரு வீட்டில் ஃபோன் செய்கிறார்கள், உடனே ஒரு படையே வருகிறது அழிக்க!

    ReplyDelete
  3. அட சண்டாளா, நானும் நீ நம்ம கலசலிங்கம் காலேஜில சந்தித்தத எழுதுவேன்னு பாக்கிறேன். மவனே நீ மாட்டேங்கிறே. மரியாதையா எழுது.

    ReplyDelete
  4. நன்றி நண்பனே!

    நாம் சந்தித்ததை நான் மறக்கவில்லை. அப்போது நாம் ஓவராகப் புல்லரித்ததால் அங்கு புல் வளர்ச்சி அதிகமானது உனக்குத் தெரியாது!
    அப்போது நடந்த தமாஷ்களைப் பற்றி மின்னஞ்சல் அனுப்பு. சேர்ந்தே எழுதுவோம்.

    ReplyDelete
  5. சமுத்திரக் கனிApril 03, 2012

    வாசி! இன்னும் அதே நகைச்சுவை உணர்ச்சி! keep it up

    ReplyDelete