Wednesday, February 9, 2011

சம்பவங்கள் - நட்டுவாக்களி/கொலக்கேசியா/பள்ளி அறை

நட்டுவாக்களி நாச்சிமுத்து 

காலம்: பிளஸ் 2 
நேரம்: இரவு 12 மணி 
கையில்: குமுதம் - படித்த பகுதி: நட்டுவாக்களி நாச்சிமுத்து 
நட்டுவாக்களி என்றால் என்ன என்று, அன்று அப்போது தெரியாது. படித்து விட்டுக் குமுதத்தை வைத்து விட்டு,
படுக்கப் பாய் விரித்தேன். திடீரென்று தரையில், தேள்களின் உலகில் அர்னால்ட் போல ஒரு மொக்க (மதுரை வழக்கில் பெரிது என்று பொருள்,சென்னை வழக்கு அல்ல) தேள் என்னை நோக்கி ஓடி வந்தது. எனக்கு Hand and Leg no run (தமிழ்ப் படுத்திக்கொள்ளவும்). என்ன செய்வது என்று புரியாமல்,no sin for danger,தலையணையை அதன் மேலே போட்டேன். தலையணை மேல் ஏறி நின்று பரதம், tap டான்ஸ் கலந்த ஸ்டைலில் ஒரு இன்ச் விடாமல் மிதித்தேன். "உஷ். அbba" என்று தலையணையைத் தூக்கினால்... ஜேம்ஸ் பாண்ட் ஸீன் கானரி வெற்றுடம்பாய் குப்புறப்படுத்திருக்க,  
அழகான ரஷ்யன் பெண் உளவாளி 2 பீஸ் உடையில், கால்களால் பாண்ட் முதுகில் மசாஜ் செய்தபின் பாண்ட் புத்துணர்ச்சியுடன் எழுவானே... அந்த வேகத்தில் அந்த அர்னால்ட்  தேள் தெம்பாக ஓடத்தொடங்கியது!ஆத்திரமும் அவமானமும் பொங்க, "நீ இல்லங்கில் ஞான்" என்ற வெறியுடன் பாயைத்தூக்கி அதன் மேல் போட்டு, என்டர் தி டிராகன் ப்ரூஸ் லீ ஸ்டைலில் ஒரு ஜம்ப் அடித்து (but no oOO sound),பாயில் மிதித்து என் எதிரியைக் கொன்றேன். 
மறுநாள் காலை அர்னால்ட் தேள் தான் நட்டுவாக்களி என்று அழைக்கப்படுவதாய் தெரிந்தது.

பள்ளி அறை (?!)மதுரையில் LKG படிக்கும் போதும், என்னோட பெஞ்ச் லாஸ்ட் தான். சுவற்றுக்கும் அந்த பெஞ்சுக்கும் இடையே ஒரு பையன் படுக்கும் அளவு இடைவெளி. ஒரு மதியம் எனக்குத் தூக்கம் வந்தது! பக்கத்தில் இருந்த பையனிடம் என் பையை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, அந்த இடைவெளியில் படுத்துத் தூங்கிப்போனேன்!முழிச்சுப் பார்த்தால் ஒருபக்கியையும் காணல! படியில் கீழே வந்து பார்த்தால் கீழ் கிளாசும் காலி. அதாவது மொத்த ஸ்கூலும் காலி! ஷட்டர் கேட் பக்கத்தில நின்னு அழுது கிட்ருந்தேன்.எங்கப்பா சைக்கிளில் தேடி வந்தார். ஷட்டர் கேட்ல எவண்டா கேப் வச்சு டிசைன் பண்ணான்னு நொந்து போனேன். கேப்ல கை விட்டு எங்கப்பா மொத்தினார். அந்த வயசுல வாட்ச்மேன் வீடு எதிர்வீடுன்னு அப்பா கேட்ட G.K கேள்விக்கு விடை சொன்னேன். அப்புறம்... வாட்ச்மேன், சாவி, கதவு திறப்பு. மீண்டும் மொத்து. சைக்கிள் பாரில் ஒக்கார்ந்து போறது கீழே ஒரு கொடுமை. அதே நேரத்தில மேலிருந்து மொத்து டபுள் கொடுமை!அதன் பிறகு இன்று வரை மதிய நேரத்தில் வீட்டைத் தவிர எங்குமே என் கண் அசருவதில்லை! எவ்வளவு களைப்பா இருந்தாலும்! 
கொலக்கேசியா ஆண்ட்டிகோரம்
படிக்கும் காலத்தில் நான் பாட்டனி டெர்ம்சை நன்றாக ஞாபகம் வைத்திருப்பேன். ஒரு நாள், வகுப்பு இடைவேளை நேரத்தில், மூன்று நண்பர்கள் ”எப்படி நீ இப்படி ஞாபகம் வைத்திருக்கிறாய்” என்று கேட்டார்கள். “சொல்றேன்.ஆனா கொஞ்சம் பயமாக இருக்கும் பரவாயில்லையா?” என்றேன். மூவரும் "பரவாயில்லை சொல்லு" என்றனர். "ஒரு எக்சாம்பில் சொல்றேன். சேனைக்கிழங்குக்கு பாட்டனி டெர்ம் கொலக்கேசியா ஆண்ட்டிகோரம்(colocasia antiquorum).இதை ஞாபகம் வச்சுக்க ஒரு கதை இருக்கு”. மூவரும் “ம்” கொட்டினர். “ஒரு தெருவில கூட்டமா இருக்கு. ஒரு ஆள் என்ன இங்க கூட்டம்னு கேக்கிறார். அப்ப இன்னொரு ஆளு சொல்றாரு.


’கொலக்கேசியா.ஆன்ட்டிய கோரமா கொன்னுட்டாங்க!” ”ஞாபக வக்கிற டிப்ஸ் கேட்ட மூணு பேரும் ஒரு லெவலாயிட்டாங்க.

No comments:

Post a Comment