Sunday, May 8, 2011

சிறு கவிதைகள் . . . தொகுப்பு 6


பலூன்களும் மனிதர்களும்
பல வண்ணங்களில் . . .
பல வடிவங்களில் . .
ஒல்லியாய்...குண்டாய்...
உள்ளே காற்று.
அழகாக இருந்தாலும். . .
ஆடம்பரமாக இருந்தாலும். . .
நிரந்தரமில்லை.
ஊதிப் பெரிதாகும் தன்மை.
எந்நேரமும் வெடிக்கலாம்.
வெடிக்காதிருப்பினும்
சுருங்கி முடியும் வாழ்க்கை.


எடை
ஒரு ரூபாய் போட்டு
எடை பார்த்தேன்.
என் எடை
ஒரு ரூபாய் நாணய
அளவு குறைந்தது.


 
 தொந்தி 
அலட்சியத்தின் அடையாளம்?
காவலரின் அனுபவம் காட்டும் கருவி?
வாழ்க்கையில் முன்னுக்கு வருதல்?
ஒரு புத்தர் உலகில்! 
பல சிரிக்கும் புத்தர் உருவில்!.
வயிறு இறைவன் படைத்தது!
தொந்தி மனிதன் வளர்த்தது!
'ரோம் ஒரு நாளில் கட்டப் படுவதில்லை!'
தொந்தி மட்டும் ஓரிரவிலா வளர்கிறது?
உணவுக் காதலிக்கு ஒரு தாஜ்மஹால்!

 நம்பிக்கை
"ஜோதிடத்தில் நம்பிக்கையில்லை!"
என்றான் ஒருவன்.
"உன் ஜாதகப்படி அப்படி இருக்கலாம்!"
என்றான் நண்பன்.

No comments:

Post a Comment