Saturday, May 14, 2011

கவிதை - இணையம்...ஜாக்கிரதை

உலகத்தில் நாம்..
நம் விரல்களில் உலகம்.
உலகில் இறந்து போனவன்
இணையத்தில் உயிரோடிருக்கலாம்.
வெளியே ஆணாயிருப்பவன்
அங்கே பெண்ணாயிருக்கலாம்.
பழக்கமானவர்களே
பகல் வேஷம் போடும் போது..
முகம் தெரியாதவர்களிடம்
முன் ஜாக்கிரதை தேவை.

நைஜீரியா நாட்டிலிருந்து
நிறையப் பணம் தருவதாய்
மின்னஞ்சல் வரும்...
நம்பிக் கொஞ்சம் பணம்
அனுப்பினால்..
பணம் கொஞ்சம் குறையும்.

வங்கி அனுப்பியது போல்
மின்னஞ்சல் அனுப்பி...
அங்கி சரி செய்யும் நேரத்தில்
அழ வைக்கலாம்.

வெளிநாட்டுக் குலுக்கலில்
பரிசு விழுந்ததை நம்பினால்
தலையில் விழும் துண்டு!.



ஏமாறுபவர்  உள்ளவரை
ஏமாற்றுபவர்  இருப்பர்.
பெரிய மீனைக் காட்டிச்
சின்ன மீனைப் பிடிப்பர்.

பேராசை பெரு நஷ்டம்.
சிறு வயதில் படித்து மறந்தது.
அதிர்ஷ்ட தேவதை
வாங்காத பரிசுச் சீட்டுக்குப்
பரிசு தராது!
இன்னும் கேப்பையில்
நெய் வடிவதை
நம்ப ஆளிருக்கிறது.
குறுக்கு வழியில் பத்தாயிரம்
பத்து லட்சம் ஆகாது!
பத்தாகும்...!

2 comments:

  1. காலத்துக்கேற்ற கவிதை... நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம்...

    ReplyDelete
  2. நன்றி! மின்னஞ்சலில் அனுப்பியிருப்பாய் என்று நினைக்கிறேன்!

    ReplyDelete