Saturday, May 14, 2011

கவிதை - திரையிசைப் பாடல்கள்

 வானொலியில் பாடல்கள் ஒலிபரப்பு

"ஓ... தேவதாஸ், படிப்பு இதானா?"
படம் புரியவில்லை அந்த வயதில்.
இரண்டாம் வகுப்பு,கிராமத்துப் பள்ளி.
வெள்ளி வெத்தலைப் பெட்டி டீச்சர்.
புளியமுத்து,ஒத்தையா ரெட்டையா விளையாட்டு.
பேய்க்கதை சொல்லும்
பள்ளித்தோழன் மதுரைவீரன்.
டூரிங் தியேட்டர்.
ஆடு வெட்டித் திருவிழாவில்,
வாயில் தீப்பிழம்பு ஊதிய கலைஞர்கள்,
புலி வேசம்.

"மடை திறந்து ஆடும் நதி அலை நான்..."
குளிரூட்டப்பட்ட திரையரங்கம்.
 குளிர்ந்த உடல்.குளிர்ந்த மனம்.
இடைவேளையில் ஐஸ் கிரீம்
இசை மீது ஆசையூட்டிய பாடல்!




 
"என் ஜீவன் பாடுது...உன்னைத் தான் தேடுது.."
தாத்தாவின் மரணம்.
வாழ்வின் நிலையாமை.
கண்களில் வடிந்த கடல்.
இன்று கேட்டாலும் மனம் கனக்கும்.





"ராக்கம்மா கையத் தட்டு.. புது ராகத்தில் மெட்டுக் கட்டு.."
ஆல் இந்தியா டூர்.
ரயில் பயணம் பல நாட்கள்.
கோவா,ஆக்ரா, நைநிடால்.
ராஜாவின் துவக்க இசை
கேட்பவரை ராஜாவாக்கும்.
துள்ளி ஆட வைக்கும்.


திரையிசைப் பாடல்!
கேட்டவுடன் மனதைச்
சுமந்து செல்லும் கால இயந்திரம்!
பழைய சொட்டு நீல விளம்பரம் போல்
நினைவில் பட்டு பட்டென
வந்து போகும் நினைவுகள்!
பாடல் முடிந்த பின்னும்
நினைவு நிகழ்காலம்
திரும்பாமல் அடம் பிடிக்கும்

2 comments: