Wednesday, February 9, 2011

கவிதைகள் - குறட்டை & டிஜிட்டல் கேமரா & பொறாமை

குறட்டை
சின்ன வயதிலிருந்து
நான் கேட்ட
குறட்டை ஒலிகள் 
பிடிக்கவில்லை எனக்கு!
இப்போது
நான் விடுவதாய்க் 
குடும்பம் சொல்கிறது.
நான் கேட்காத
என் குறட்டை ஒலி
பிடிக்கிறது எனக்கு!

டிஜிட்டல் கேமரா
சிறுவன் எடுத்த  படங்கள்
விதம் விதமாய்.
எடுத்தது தந்தை பரிசளித்த 
டிஜிட்டல் கேமராவால்.
பெரும்பாலான படங்களில்
அவன் தந்தை இல்லை.
அவரோ வெளிநாட்டில்....

பொறாமை
பிச்சைக்காரன் - உட்கார்ந்த இடத்திலேயே
சம்பாதிக்கிறானே!
ட்ராஃபிக் போலீஸ் - நின்ன இடத்திலேயே
சம்பாதிக்கிறாரே!
கேட் வாக் மாடல் - நடந்தபடியே
சம்பாதிக்கிறாளே!
இப்படிக்கூடப் பொறாமைகள்! 
இவர்கள் பொறாமையைப் பார்த்துப்
பொறாமையாய் இருக்கிறது!
இவர்களால் மட்டும் எப்படி இப்படிப்
பொறாமைப் பட முடிகிறதென்று!






2 comments:

  1. Poramai... Mokai (madurai meaning) :-)

    ReplyDelete
  2. நன்றி ஶ்ரீகாந்த்! உன் பல மைகளில் இல்லை பழமை. அவைஅருமை,இனிமை,புதுமை.

    ReplyDelete