Wednesday, March 30, 2011

A Cricket fan's love story

A Cricket fan's love story

It might sound silly to you or you might bounce with joy after reading this. I loved a girl who studied with me and married her. No. We didn't cut classes and drive straight to theaters. Our interests matched and she was my maiden love. She hit my eye balls when I saw her in the first day of first year. It seemed that this wide spinning earth stopped for a moment. Couldn't sleep at night at that period and I was awake like a nightwatchman. My eyes turned red like Google e. If love is fishing, the fisherman get caught in the hook for the catch. I felt I was floating above the ground and pulled by her magnetic field. When love starts poems follow on.I decided that she was my match.
One day I declared my love to her in low pitch. She accepted without batting an eye lid. The wait was over. Our love started growing without any boundary.After the tests in the final year,   we went  back to our homes after saying bye. Six years had passed.
You throw a ball and it is retrieved by your pet dog.Thoughts about her came back like that.
Heard from her that her marriage was fixed with a New yorker. I couldn't keep quiet.My mind got tossed in full sweep. It made me run here and there. I appealed to her father who was about to retire and  uncovered everything about our love. His father gave green signal at last and we had a clean sweep.
We loved in the last century and married in this century.
She has gone to her mother's house for delivery.

Tuesday, March 29, 2011

சம்பவம் - குக்கி குடித்திருக்கிறீர்களா?

அப்போது சென்னையில் ஃபான்டா அறிமுகம் செய்திருந்தார்கள்.மதுரையிலிருந்து வந்திருந்த சொந்தக்காரப் பையனுக்கு ஏதோ எனக்குத் தெரிந்த சென்னையைச் சுற்றிக்காண்பித்துக் கொண்டிருந்தேன். தாஜ் ஹோட்டல் பக்கத்தில் நாங்கள் நின்றிருந்த போது (அங்கு அவனைக் கூட்டிப்போகவும் இல்லை, காட்டக்கூட இல்லை), கோகோ கோலா வண்டி சிக்னலில் நின்றிருந்தது. நான் அவனிடம் கோகோ கோலா கம்பெனி ஃபான்டாவை அறிமுகம் செய்திருப்பதாக, எந்தப் பெருமையும் இல்லாமல் ஒரு பொது விவரத்திற்காகச் சொன்னேன்.
     தம்பி கேட்டான், 'ஏண்ணே, கோகோ கோலா கம்பெனியோட குக்கி குடிச்சிருக்கீங்களா?' என்று. நான் இல்லை என்றேன் சிறிது குழப்பத்தோடு.'குக்கியா?'. தம்பி ஒரு கேவலமான தொனியில் சொன்னது, 'என்னண்ணே மெட்ராஸ்ல இருந்துகிட்டு குக்கி குடிக்கலைன்னு சொல்றீங்க!'
எனக்கு அசிங்கமாக இருந்தது. தமிழ்நாட்டின் தலைநகரத்தில இருக்கிற, நாம குடிக்காத குளிர்பானத்த மதுரையிலிருக்கிற இவன் குடிச்சிருக்கானா?'
கம்மிய குரலில் 'இல்லப்பா,எனக்குத் தெரியல!' என்றேன்.
    ஐந்து நிமிடத்தில் ஒரு டீக்கடையில் நுழைந்தோம். டீக்கள் (பன்மை கவனிக்கவும்-இலக்கணம்) சொல்லிவிட்டு உட்கார்ந்திருந்த போது, தம்பி 'அண்ணே, அதைத்தான்னே சொன்னேன்!' என்று சுட்டிக் காட்டினான்.அங்கு கோகோ கோலாவின் சிவப்பு நிற அடுக்கு பெட்டிகள் இருந்தன. ஒரு பக்கம் கோகோ கோலா என்றும் இன்னொரு பக்கம் கோக் ( Coke) என்றும் எழுதியிருந்தது. இவன் காண்பித்தது Coke. இதைத் தான் அவன் குக்கி என்று சொல்லியிருக்கிறான்.
செமத்தியான கோபத்தில் ' அது என்னடா?' என்றேன்.
'ஏண்ணே குக்கி தான?'. 
'Jay.. Oh.. Kay.. Eee.. என்னன்னுடா சொல்லுவ?'
'ஜோக்'
'அதை ஜீக்கின்னா சொல்ற.அப்புறம் இதை மட்டும் ஏண்டா குக்கின்னு சொன்ன?'
'நல்லா படிச்சிருந்தா நான் ஏன்னா இப்படி அலையிறேன்!' (சவடால் பேச்சு மாறி பம்மி விட்டான்.)
     விசயம் அதோடு முடியவில்லை. தம்பியை அடுத்த வாரம் அலுவலக நண்பன் ஒருவன் வீட்டுக்குக் கூட்டிச் சென்றேன். நண்பனிடம் தம்பியை அறிமுகம் செய்தேன், நண்பன் போடப் போகும் வெடிகுண்டு பற்றித் தெரியாமல். 'இவன் தான் என் தம்பி. மதுரையிலிருந்து வந்திருக்கான்!'
நண்பன் படாரென்று கேட்டான்,'யாரு அந்த குக்கியா...?'. ஒரு வழியாகி விட்டேன். நண்பன் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் தம்பி கேட்டான்,
'ஏண்ணே, ஏதொ ஒன்னு தெரியாமச் சொல்லிட்டா போஸ்டரடிச்சு ஒட்டுவீங்க போலிருக்கே?'.(மதுரைத் தமிழில் கடுப்பான குரலில் கற்பனை செய்து கொள்ளுங்கள்). அவனை எப்படி சமாளித்தேனென்று இப்போது மறந்து விட்டது.




Saturday, March 26, 2011

சிறு கவிதைகள் தொகுப்பு 1

****
மீன் பிடிக்கும் 
பிடிக்கப் பிடிக்காது 
****







 


பறவைகளைப் பார்த்தால் சலீம் அலியும்
தொலை பேசியைப் பார்த்தால் கிரகாம் பெல்லும் 
வானொலியைப் பார்த்தால் மார்கோனியும் 
கண்ணாடியைப் பார்க்கும் போது மட்டும் நானும்
என் நினைவுக்கு வருகிறவர்கள்
****


 



வீட்டில் ஒட்டடை அடித்தேன் 
எட்டுக்கால் பூச்சிக்கு 
வீடில்லாமல் போனது!




 



**** 
 பகைவன் இறந்து விட்டான் 
பகை?
****                  

                  ஆனந்தம்                             
தவித்த வாயின் தாகம் தணிவது. . .
அடங்கியிருந்த மூத்திரம் போவது. . .
பசித்த வயிறு நிரம்புவது. . .
அருவிக் குளியல். . .
பழைய நண்பனைக் காணல். . .
தொட்டில் குழந்தையின் தூக்கத்துப் புன்னகை

****
                       

 
                 



உடைந்த கடிகாரம்      
அந்தக் கடிகாரத்திற்கு 
நேரம் சரியில்லை!
****

சம்பவம் - தலைச்சாயம்

சமீபத்தில் முடி வெட்டும் கடைக்கு தலைச்சாயம் பூசச்சென்றேன்.கடையில் கைப்பேசியில் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. தலையில் சாயம் பூசி முடித்தார் கடைக்காரர். ஒரு பாட்டு முடிந்து அடுத்த பாட்டு தொடங்கி இசை மட்டும் வந்து கொண்டிருந்தது. அப்போது கடைக்காரர் என்னிடம் “ம்யூசிக் போட்றீங்களா?”, என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின் வருமாறு குழம்பினேன். 
”கைப்பேசியில் வரும் ம்யூசிக்கைக் கேட்கிறாரா? நாமளே ஷோலேயில் வரும் சஞ்சீவ் குமார் மாதிரி கையை ஒட்டி வைத்து, சுத்தித் துணி தொங்க ஒக்காந்திருக்கோம். நம்மகிட்ட ஏன் இந்தக் கேள்வி.  நாம வீட்ல் ம்யூசிக் போடுவதை ஒருவேளை தலையைத் தொட்டே தெரிஞ்சுக்கிட்டாரோ”
            பின் டக்கென்று புரிந்தது அவர் கேட்டது என்ன என்று. சாயத்தை “மீசைக்குப் போட்ரீங்களா” என்று சென்னைத் தமிழில் கேட்டிருக்கிறார்.அட “ம்யூசிக்(மீசைக்குப்) போடவா?”ன்னு கேட்டிருந்தாலும் எதில வாசிப்பீங்கன்னு கேட்டிருப்பேன். நல்ல வேளை, தான் சேரில் உட்கார்ந்து கொண்டு, என் தலை மை (லீடர்ஷிப்?!) காயும் நேரம் , “மீசைக்குப் போட்றீங்களா?”, என்று என்னை அவர் மீசைக்குப் போடச்சொல்லாமல் இருந்தார். 

பாடலும் சாயலும்... - 2


சாயல் பாடல்: Delhi 6 - Hindi Song - "Rehna Tu"(ஏ ஆர் ஆர்)
 http://www.youtube.com/watch?v=KbF05fKNT2M
 பாடல்: "Roxanne" song by Police
http://www.youtube.com/watch?v=a2Qad-gaHMg 
******
 சாயல் பாடல் :சஹானா சாரல் பூத்ததோ ...(ஏ ஆர் ஆர்)
http://www.youtube.com/watch?v=7bik6PMo0mk
பாடல்: நிலவு தூங்கும் நேரம்...(இ ரா)
http://www.youtube.com/watch?v=Hp3eryI9sp0
  பொருத்தங்கள் - தொடக்கத்தில் இசை முடிந்தவுடன் வரும் நிசப்தம்.. பாதியில் வரும் வயலின் இசை சாயலில் குரல் ஒலியில் தீம் தன னன என்று
 சாயல் பாடல் : ஒரு தேவதை வந்து விட்டால் (எஸ் ஏ ராஜ்குமார்)

 http://www.youtube.com/watch?v=plXOkVhLYNg
பாடல்: ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு (இ ரா)
http://www.youtube.com/watch?v=z7DLYPVdk1I
 சாயல் பாடல் :பார்த்த முதல் நாளே (ஹா ஜெ)
 http://www.youtube.com/watch?v=IvRpBzVw7y8
பாடல்:ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் (எம் எஸ் வி)
 http://www.youtube.com/watch?v=NQSHp7HYQeA&feature=related
சாயலிலும் குதிரை போவது போன்ற பின்னணி இசை தொடக்கத்தில். காட்சியில் வாகனம் மாறி விட்டது. கொஞ்சம் மாற்ற வேண்டுமே! இது சாயல் என்று தெரிய சில வருடங்கள் ஆகிவிட்டது.

Sunday, March 20, 2011

பாடலும் சாயலும் . . .1

இந்தப் பகுதியில் எந்தப் பாடல் எந்தப் பாடலின் சாயலில் இருக்கிறது அல்லது எந்தப் பாடலை நினைவு படுத்துகிறது என்று பார்ப்போம். இவை அப்பட்டமாக அப்படியே ஈயடிக்கும் வேலை இல்லை. சந்தப் பொருத்தம், தாளப் பொருத்தம் இருக்கலாம் இவைகளுக்குள். முதலில் வந்த பாடலில், அடுத்த Stanzaவில் பிட்ச் குறைந்தால், சாயலிலும் அடுத்த Stanzaவில் பிட்ச் குறையும். அடுத்த Stanzaவில் பிட்ச் கூடினால் சாயலிலும் பிட்ச் கூடும். 

March 2011
******
சாயல் பாடல் : டாடி மம்மி வீட்டில் இல்ல,,(தே ஶ்ரீ பி)
http://www.youtube.com/watch?v=ljVWyhxpEYk&playnext=1&list=PLBF1062A878917984
பாடல்: குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டு...(இ ரா)
 http://www.youtube.com/watch?v=3GSMqlXeesU
 சந்தப் பொருத்தம்: தன னான னன் னன் னன் ன. சாயலில்.. தான னன்ன னன் னன் னன்ன
அடுத்த Stanzaவில் இரண்டுமே பிட்ச் கூடுகின்றன.
******
சாயல் பாடல் :நானே இந்திரன் நானே சந்திரன்...(தே ஶ்ரீ பி)
 http://www.youtube.com/watch?v=knSc2enDutE&feature=related
பாடல்: ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...(இ ரா)
http://www.youtube.com/watch?v=h2twwBOo__0
******
 சாயல் பாடல் : என் இதயம் இதயம் துடிக்கின்றதே...(தே ஶ்ரீ பி)
http://www.youtube.com/watch?v=7bik6PMo0mk
பாடல்: நேத்து ஒருத்தரு ஒருத்தரப் பாத்தோம்...(இ ரா)
http://www.youtube.com/watch?v=xZWay1Y-1Yc
 ******
சாயல் பாடல் புதிய மனிதா பூமிக்கு வா(ஏ ஆர் ஆர்)
http://www.youtube.com/watch?v=vMy9lBj7G-g
 பாடல்: We are the Robots..Kraftwerk(என் ஸ்கூல் டேஸ்ல, தியேட்டர்ல ஸ்க்ரீன் தூக்கும் போது இந்த மியூசிக் போடுவாங்க)
http://www.youtube.com/watch?v=VXa9tXcMhXQ&feature=related
 ******
சாயல் பாடல் காதல் அணுக்கள் உடம்பில்(ஏ ஆர் ஆர்)
 http://www.youtube.com/watch?v=XTzXaTRXdx0
 பாடல்:   "How many times" (Bob dylan)
http://www.youtube.com/watch?v=8cjXewP8kcI
 ******

Saturday, March 19, 2011

சம்பவங்கள் - பேச்சாளர்

பேச்சாளர்
  கல்லூரியில் கம்ப்யூட்டர் லேப்பில் பணிபுரிந்த ஒருவர், நான் அங்கு வேலை பார்த்த காலத்தில் ஒரு நாள் மதியம் என்னிடம் வந்து பேசினார். அவர் ஆங்கில வார்த்தைகளை தமிழ் போல உச்சரிப்பார். லேப்பில் மானிடரெல்லாம் (மானிட்டர் இல்லை) தூசியாயிருக்கிறது என்பார். நான் 'விட்டா மானிட சமுதாயத்திற்கே தூசி தட்டுவீங்க போலிருக்கே' என்பேன்.அவர் ஏன் அன்று வந்து பேசினார் என்று பின் நொந்து கொள்ளும்படி ஆனது. அவரின் சொந்தக்காரர் ஒருவர் ஒரு அரசியல் கட்சியில் இருப்பதாகச் சொன்னார். என் கெட்ட நேரம், உங்க சொந்தக்காரருக்குக் கல்யாணம் ஆயிருச்சா?' என்று கேட்டேன். அவர் சொன்னது,'இல்ல சார், அவர் பேச்சாளர் சார்!'. நான் கேட்டேன்,' அவரு கட்சியில பேச்சாளர் சரி. அவருக்குக் கல்யாணம் ஆயிருச்சா'. அவரின் பதில்,'அவரு பேச்சாளர் சார்'. நான் கடுப்பின் உச்சியில் மீண்டும் கேட்டேன்,'அவரு பேச்சாளர் தான் ஒத்துக்கிறேன். நான் கேட்கிறது கல்யாணத்தைப் பத்தி'. அவர் நிதானமாகச் சொன்னார்,'அதத் தான் சொல்றேன் சார்.அவரு பேச்சாளர்'. நான் இதற்குள் கொஞ்ச தூரம் வெயில் நேரத்தில் லொங்கு லொங்கு என்று ஓடிய மாதிரி ஆகியிருந்தேன். 'நீங்க அவர் பேச்சிலர்னு சொல்றீங்களா?'. அவர் ஆம் என்பது போல் தலை ஆட்டினார். நான் கை எடுத்துக் கும்பிட்டு 'ஐயா, நீங்க ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் பாலம் போட்டது போதும்' என்றேன். அந்தச் சம்பவத்தை இன்று நினைத்தாலும் வேர்த்துக் கொட்டுகிறது. என் நண்பர்கள் பலர் என் கடியைப் பெரிதாகச் சொல்வார்கள். நான் எப்படியெல்லாம் மாட்டியிருக்கிறேன் என்று அவர்கள் அறிந்தால் சந்தோசப்படுவார்கள்.


கவிதை - சிகரெட்டுகள்

சிகரெட்டுகள்

எமனின் 


அருள் 


வேண்டிச்

செய்யும் 


பூசையில் 

பத்திகள்!







Sunday, March 13, 2011

சம்பவங்கள் - மூட்டைப்பூச்சி / நெய் ஊத்தாப்பா/மரியாதை

மூட்டைப்பூச்சி
    கல்லூரியில் பணி புரிந்த போது இரண்டு வருடங்கள் விடுதி வாசம் முடிந்து,  நான் ஶ்ரீவில்லிபுத்தூர் வந்து விட்டேன். தங்கம் லாட்ஜ் எதிரே ஒரு அறையில் தங்கியிருந்தேன். என்னுடன் எட்வர்டும், மணிகண்டனும் வந்து தங்கினார்கள்.
அந்த அறையில் மூட்டைப்பூச்சித் தொல்லை பெருங்கொடுமையாக இருந்தது.
மூன்று பேர் படுக்குமளவு தங்கும் அறை, ஒரு அட்டாச்ட் பாத் ரூம் அவ்வளவு தான். முதலில் ரூம் பிடித்ததால் நான் பூர்வீகக் குடிமகனாக ஸ்ட்ராடஜிக் பொசிஷனில் நடுவில் படுத்திருப்பேன். எட்வர்டும், மணிகண்டனும் எனக்கு அரண்களாக என் இரண்டு புறத்திலும் இருந்து என்னை மூட்டைப் பூச்சியிடமிருந்து காத்துக் கொண்டிருந்தனர்.
   ஒரு நாள் இரவு நான் மட்டும் தனியே இருந்தேன். மூட்டைப் பூச்சிகளின் பழக்க வழக்கங்களை  சிறிது நேரம் கவனித்தேன். மறு நாள் எட்வர்டும் மணிகண்டனும் வந்து விட்டார்கள். இரவு நான் என் அப்சர்வேஷன்களைச் சொன்னேன். 'விளக்கு எரியும் போது வெளிய வரக் கூடாதுங்கிறத அதுக ரூல் போல ஃபாலோ பண்ணுதுக.' அப்போது விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஆனாலும் ஒரு மூட்டைப்பூச்சி வெளியே வந்தது. அதை நசுக்கும் போது மணிகண்டன் சொன்னது,' ரூல ஃபாலோ பண்ணாத மூட்டைப்பூச்சி அவுட்'
   மூட்டைப்பூச்சியை ஒழிக்க நாங்கள் திட்டம் தீட்டினோம். வயக்காட்டிற்கு அடிக்கும் மருந்தை ரூமில் அடிக்க முடிவானது. அந்த வாரக்கடைசியில் நான் ஊருக்குப் போய் விட்டேன். திங்களன்று காலை ஊர் திரும்பி ரூமிற்குச் சென்றேன். ரூமில் ஒரே மருந்து வாடை. முதுகில் மாட்டிக் கொண்டு  அடிக்கும் கருவியை வைத்து அடிக்க ஒரு ஆளை வாடகைக்கமர்த்தி அடித்ததாக எட்வர்டும்,மணிகண்டனும் பெருமையோடும்,மூட்டைப்பூச்சிகள் ஒழிந்த நிம்மதியோடும் சொன்னார்கள். நான் கேட்டுக் கொண்டே தலை சீவிக் கொண்டிருந்த போது, அறையின் ஓரத்தில் இரண்டு துணி மூட்டைகள் இருந்ததைப் பார்த்து, இயல்பாகக் கேட்டேன், 'இதென்ன மூட்டை?' என்று. எட்வர்டும், மணிகண்டனும் அதிர்ந்து போய்,மூட்டைப்பூச்சி என்று நினைத்து, 'எங்க?' என்று பயத்தோடு என்னைப் பார்த்தனர். நான் துணி மூட்டையைக் காட்டியதும் 'ஓ! இதுவா' என்று பயம் தெளிந்தார்கள். அவர்கள் முகத்தில் காட்டிய அதிர்ச்சியை எந்த சினிமாவிலும் எந்த நடிகரும் காட்டவில்லை இதுவரை.
  நெய் ஊத்தாப்பா
 கல்லூரியில் உடன் பணி புரிந்த ஒருவரின் பெயர் ஹரிஹரன். கேரளாவைச் சேர்ந்தவர். நாங்கள் வழக்கமாக அக்கவுண்ட் வைத்துச் சாப்பிடும் கடைக்கு, மாலை நேரம் அவர் தனியே சென்றிருக்கிறார். இட்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நெய் ஊத்தாப்பம் சொல்ல நினைத்து 'நெய் ஊத்தாப்பா' என்று சொல்லியிருக்கிறார்.பிற மாநிலத்தில் தமிழ்நாட்டு உணவுகள் பெயர் மாற்றம் செய்யப்படும். வடா, தோசா போல. என்னடா இது இட்லிக்கு நெய் ஊத்தச் சொல்கிறாரே என்று நினைத்து ரெகுலர் கஷ்டமரை திருப்தி படுத்த சர்வர் நெய் கொண்டு வந்து இட்லி மேல் ஊற்ற... அதைப் பார்த்து விட்டு ஹரிஹரன் டென்ஷனாகி  'நெய் ஊத்தாப்பா' என்று பிட்ச் உயர்த்திச் சொல்ல... சர்வர் மேலும் இரண்டு ஸ்பூன் ஊற்ற... நல்ல வேளை, அப்போது இன்னொரு நண்பர் வந்து எடுத்துச் சொன்னதால் ஹரிஹரனுக்கு நெய் ஊத்தாப்பம் கிடைத்து. இல்லையென்றால் அன்று நெய் அபிஷேகமே நடந்திருக்கும்.
தமிழ் மரியாதை
கல்லூரியில் அட்மின் பிரிவில் ஒருவர் பணிபுரிந்தார். அவர் கேரளாவைச் சேர்ந்தவர். தமிழ் ஓரளவு நன்றாகப் பேசுவார் சில தவறுகள் தவிர. அதில் ஒன்று மரியாதை வழக்கு. நான் ஒரு நாள் ஒரு லேப் ஒன்றினுள் செல்லப் போன போது, அதன் வாசலில் இருந்த ஒரு ஸ்டாஃபிடம் அட்மின் அதிகாரி கேட்டார்,'உங்க HOD இருக்கானா?'. கேள்வி கேட்ட அவரும், அந்த HODயும் சிறு வயதில் ஒன்றாகக் கோலி விளையாடியவர்களில்லை. பின்னர் அவர் லேப்பினுள் சென்றார். நானும் உள்ளே சென்றேன். அட்மின் அதிகாரி அங்கிருந்த டேபிள் ஒன்றையும் சேர் ஒன்றையும் தொட்டுப் பார்த்துவிட்டு லேப்பில் இருந்த ஒருவரிடம் சொன்னார்.' டேபிள் சேர் எல்லாம் தூசியா இருக்காங்க!' . ஒரே நேரத்தில் அவரின் இந்த இரண்டு தவறுகளையும் கேட்க வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ந்தேன். இந்த போஸ்ட் போடக் கருத்து கொடுத்த அவருக்கு நன்றி.

Saturday, March 12, 2011

சம்பவங்கள் - கல்லூரியில் ஃபுட்பால்/டிவி/கடிகார அறிவியல்

கல்லூரியில்  ஃபுட்பால்
கலசலிங்கம் கல்லூரியில் படிக்கும் போது (கடைசி வருடம்), ஹவுஸ் மேட்ச் நடக்க இருந்தது. நானும் எனக்குப் பிடித்த விளையாட்டான ஃபுட்பாலில் விளையாட பெயர் கொடுத்தேன். ஶ்ரீவில்லிபுத்தூரில் ஒரு பள்ளி மைதானத்தில் பயிற்சி விளையாட்டுக்கள் நடந்தன. மூன்று நாள் நானும் கலந்து கொண்டு விளையாடினேன். அதை விளையாடினேன் என்று சொல்வது பொய்யாகிவிடும். ஏனென்றால் பந்து என் காலில் படவேயில்லை. இருந்தாலும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்ததில் நான்காம் நாள் காய்ச்சல் வந்து விட்டது. மூன்று நாள் ரூமில் படுத்துக் கிடந்தேன்.
     நான்காம் நாள் உடம்பு சரியாகி கல்லூரி செல்ல பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன். ஜீனியர்ஸ் இரண்டு பேர் என்னைப் பார்த்து அருகில் வந்தார்கள். அதில் ஒருவன் என்னுடன் கால்பந்து( என் காலில் படாத பந்து!) விளையாடியவன். அவன் பெயர் சரவணன் (மதுரை). அவன் ஜாலியான ஆள். நன்றாகக் கட்டையைக் கொடுப்பவன். என்னைப் போன்ற நபர்களிடம் நான் கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பேசுவேன். ஆனால் அன்று அசால்டாக இருந்து விட்டேன். திடீரென்று சரவணன் என்னிடம் ' என்ன சார் நீங்க, அதுக்குப் பிறகு ஆளையே காணாம். நீங்க வராம யாராலயும் கோல் போடவே முடியல' என்றான். 'இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமா ஆக்கிட்டாய்ங்க!' எனக்கு நம்பவே முடியவில்லை. இது கனவா நிஜமா? புல்லரித்தது. என்னடாயிது நம்மளப் போயி இப்படிச் சொல்றான்.ஒரு வேளை நமக்கே தெரியாம நாம நல்லா விளையாடுனோமோ? இருந்தாலும்  எதற்கும் இருக்கட்டுமென்று ஒரு பெருமையான சிரிப்பைச் சிரித்து வைத்தேன். அதில் கொஞ்சம் சந்தேகமும் கலந்திருந்தது. சரவணின் கூட இருந்த நண்பன், சும்மாயிருக்காமல்,'சார் என்ன அந்த அளவா விளையாடுவாரு!' என்றான். அதற்கு சரவணன் சொன்ன பதில், 'பின்ன இவரு தான கோலி!'. சரவணன் புகழ்ந்த போதே நான் கொஞ்சம் உஷாராகியிருக்க வேண்டும். அன்று வழிந்த அசடு பல ஆண்டுகள் ஆகியும் நினைவில் இருக்கிறது.
கல்லூரி விடுதி டிவி
கலசலிங்கம் கல்லூரியில் பணி புரிந்த போது, முதல் இரண்டு வருடங்கள் விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது விடுதியில் இருந்த டிவியில் சினிமா பாட்டு பார்க்க(?) மாணவர்களும் மற்ற ஆசிரியர்களும் மாலை நேரங்களில் டிவி முன் பெருங்கூட்டமாக பெஞ்ச்களில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்போது கேபிள் காலம் இல்லை. தூர்தர்ஷன் சரியாகத் தெரியாது. ரூபவாஷினி-சிலோன் தொலைக்காட்சி ஏதோ ஓரளவு தெரியும். நானும் ஒரு நாள் எவ்வளவு தெளிவாகப் படம் தெரிகிறது என்று பார்க்கச் சென்றேன். பாட்டு தெளிவாகக் கேட்டது. ஆனால் படம் புள்ளி புள்ளியாகத் தெரிந்தது. நாமாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டியது தான். அங்கிருந்து சலிப்போடு எழுந்து வருமுன் உடனிருந்த ஆசிரியர் ஒருவரிடம் நான் சொன்னது, 'உலகத்திலேயே நிறைய ஆளுங்க சுத்திலும் கூடி உக்காந்து ஒரு ரேடியோவ மொறச்சுப் பாத்துக் கிட்ருக்கிறது இங்கயாத் தானிருக்கும்!'
கடிகாரம் அறிவியல்
  கல்லூரியில் பணி புரிந்த போது ஒரு நாள் இரண்டு மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதில் ஒருவன் சதீஷ் (மதுரை). அன்று தேதி 27. ஆனால் என்னுடைய வாட்சில் 29 என்று காண்பித்துக் கொண்டிருந்தது. இதை ஒருவன் என்னிடம் சுட்டிக் காட்டினான். நான் வாட்சைச் சரி செய்து கொண்டே, சமாளிக்கும் விதமாக, 'சயின்ஸில் நான் மற்றவர்களை விட இரண்டு நாட்கள் அட்வான்ஸாக இருக்கிறேன்' என்றேன். அப்போது பத்திரிக்கைகளில் அமெரிக்கா இந்தியாவை விட அறிவியலில் பத்து வருடங்கள் முன்னேறி இருப்பதாக எழுதுவார்கள். இதைக் கேட்டதும் சதீஷ் டக்கென்று கூட இருந்தவனிடம் சொன்னான்.'டே அது போன மாசம் 29 ஆம் தேதிடா!'. நான் சதிஷைப் பாராட்டினேன் அந்த ஜோக்கிற்காக.

கவிதை - ஞான ஒளி



ஞான ஒளி


பத்தாவது பாடம்

கடினமில்லை என்று 
பன்னிரண்டாம்
வகுப்பின் போதும்,
பன்னிரண்டாம் வகுப்புப் 
பாடம்
எளிது என்று

கல்லூரியிலும்,
கல்லூரிப் பாடம்
ஜுஜுபி என்று
வேலைக்கு வந்ததும்


தெரிகிறதே,
இது தான்
அறிவுக்கண் திறப்பது
 


என்பதா!

கவிதை - சைக்கிள்

சைக்கிள்
சின்ன சைக்கிள்!
அரை மணி/ஒரு மணி 
நேர வாடகைக்கு
நான் கற்றுத்தரச்சொன்ன நண்பன்
ஓசியில் ஓட்டினான்
என்னைப் பின் ஓட விட்டான்
அதன் பின் அப்பா வந்தார் 
சொல்லித்தர!
அப்பா பிடித்துக்கொள்ள
பெடல் மிதிக்க
விழும் பயத்தில்
கை நடுங்க
வாய் கோண
சில விழுதல்களுக்குப்பின்
திரும்பிப் பார்த்தால்
அப்பா தூரத்தில்!
நான் ஓட்டப்பழகி விட்டேன்
அடடா அந்த அனுபவம்
மீண்டும் நான் சைக்கிள் 
பழக வேண்டும்.
முடியுமா?