Saturday, April 2, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 2

கீழ்க் கண்ட கவிதைகள் எழுதப்பட்ட காலம் இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பத்து வருடத்தொடக்கத்தில்... 


 
  
*******

எனக்குத் தெரியும் 
நிலவில் உண்டு வண்டுகள் 
அவள் முகமும் விழிகளும் தான்! 
*******



 

*******
நேரத்தின் முக்கியத்துவம் பற்றி 
நாங்கள் நேரம் போனதே தெரியாமல் 
பேசிக்கொண்டிருந்தோம்!
*****
 


  


*****
வரிசையாய் நகரும் வெளிச்ச வீடுகள் 
இரவில் தூரத்தில் செல்லும் புகை வண்டி!
*****
 




*****

நான் ஆசை அறுத்து விட்டேன் 
அதை இந்த உலகமே அறிய வேண்டும்!
**** 
 

 

ஒரு கோழிக்குஞ்சு சொல்கிறது
தாய் பிரியாணி ஆனாள்
உடன் பிறந்தோர் ஆம்லேட்டாயினர் 
அழத்தெரியவில்லை 
என் பிறப்பின் நோக்கம் மனித உணவெனில் 
வளர்ந்தபின் உண்ணட்டும் 
வயிறு நிரம்பும்!
***** 




1 comment:

  1. கோழிக்குஞ்சுவின் சோகமும் அதன் நல்ல எண்ணமும் எனக்கு பிடிச்சுருக்கு.

    ReplyDelete