Sunday, April 17, 2011

பாடலும் சாயலும் . . .3



'கன்னித் தீவுப் பொண்ணா ' பாடல்,படம் யுத்தம் செய்
   இந்தப் பாடலின் சந்தம் அப்படியே 'தோட்டத்தில பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்' என்ற ரஜினி படப் பாடலை ஒத்திருக்கிறது.

'ஒட்டகத்தக் கட்டிகோ கெட்டியாக ஒட்டிக்கோ' பாடல், படம் ஜென்டில்மேன்
சமீபத்தில் இந்தப் பாட்டைக் கேட்ட போது, இது அப்படியே 'சித்தாட கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு' என்ற எவர்கிரீன் பாட்டைப் போலவே இருப்பது தெரிந்தது.மெட்டிலும் பொருத்தம், முக்கியமாக அந்தத் தவில் மேளம்.

'தக தைய தைய தையா தையா' பாடல், படம் உயிரே

சமீபத்தில் இந்தப் பாட்டைக் கேட்ட போது, இது 'பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்' என்ற இளையராஜா பாட்டைப் போல இருப்பது போலிருந்தது. மெல்லத் தொடங்கி வேகம் கூடுவதில் ஒற்றுமை. பிண்ணனி இசையிலும் அங்கங்கே ஒற்றுமை.


'உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்' பாடல், படம் காதல்
இந்தப் பாடலின் பின் பகுதியில் வந்த இசை கேட்ட மாதிரி இருந்தது. யோசித்தால் இது 'நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா' என்ற  பாடலின் சாயலில் இருப்பது தெரிந்தது.பாதிக்கு மேல் வரும் வயலின் ட்யூனை கிட்டத்தட்ட அப்படியே விட்டுவிட்டார்கள். ராகம் மட்டும் 'நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை' பாடல் அமைந்த ராகத்தில் போட்டிருக்கிறார்கள்.

'அய்யய்யோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி' பாடல்,படம் ஆடுகளம்
இந்தப் பாடல் அப்படியே மெட்டிலும் தாளத்திலும் 'இஞ்சி இடுப்பழகா மஞ்ச செவப்பழகா' பாடலை ஒத்திருக்கிறது.

'நிலா அது வானத்து மேலே' பாடல், படம் நாயகன்
இந்தப் பாடலின் தாளம் அப்படியே 'இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்' என்ற நவராத்திரி படப்பாடலின் சாயலில் இருப்பது இப்பாடல் வெளிவந்த போதே தெரிந்தது. மெட்டில் கூடப் பொருத்தம் இருக்கும். பாடலின் நடையின் வேகம் கூட்டப் பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment