Wednesday, June 1, 2011

சம்பவங்கள் - நடுக்கட்டில்/முடி பறக்குது/தர்மேந்திரா/டாக்டர்/தாம்பாளம்

நடுக்கட்டில்
திருச்சி ஆர்.இ.சி கல்லூரிக்கு மாணவர்களை அழைத்துக் கொண்டு சென்றிருந்தேன் ஒரு கல்சுரல் போட்டியில் பங்கெடுப்பதற்காக. ஃபெஸ்டம்பர் என்ற பெயரில் வருடா வருடம் நடத்துவார்கள். அப்போது நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் நான் படிக்கும் போது ஆசிரியராக வேலை பார்த்தவர். நான்  வேலைக்குச் சேர்ந்ததும் அவர் எம்.இ படிக்க ஆர்.இ.சியில் சேர்ந்திருந்தார். இரவு அவரின் அறையில் தங்கிக் கொள்ளுமாறு சொன்னார். நானும் இரவு அங்கு சென்றேன். அங்கு மூன்று கட்டில்கள் இருந்தன.அவரின் ரூம் மேட்ஸ் ஊருக்குச் சென்றிருந்தனர். நான் கேட்டேன்,"எந்தக் COTல சார் படுத்துக்க?". அவர் சொன்னார்," நடுக் COTல படுத்துக்க வாசி!". இந்த பதில் என்னைக் கடி மோடுக்குக் கொண்டு செல்ல... நான் குரலை இரக்க பாவத்திற்கு மாற்றிக் கொண்டு,"உங்கள நம்பி வந்த என்னை, நடுக்காட்டுல படுக்கச் சொல்றீங்களே சார்?". அவர் "உன்னை ரூமுக்கு வரச் சொன்னதுக்கு எனக்கு இது வேணும்!"   

முடி பறக்குது
ஆட்டோவில் போய்க் கொண்டிருந்தோம். என் பெரிய பையன் என்னிடம் சொன்னான். "அப்பா காத்துல உங்க முடி பறக்குது!". நான் சொன்னேன், " அப்படிப் பறக்கனும்னு என் முடிகிட்ட நான் சொல்லியிருக்கேன். பறக்கலன்னா வெட்டிருவேன்னும் சொல்லியிருக்கேன்."

தர்மேந்திரா / ப்ளாக் அன்ட் ஒயிட்
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் சென்னை வந்த புதிதில் காலனி நண்பனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். டிவியில் தர்மேந்திரா படம் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு வந்த ஆச்சரியத்தைச் சற்று சத்தமாக  வெளிப்படுத்தினேன். "என்னது தர்மேந்திரா ப்ளாக் அண்ட் ஒயிட் படத்தில நடிச்சிருக்கிறாரா? அந்தக் காலத்திலியே நடிச்சிருக்கிறாரா?". நண்பன் நிதானமாகச் சொன்னான் "டிவி ப்ளாக் அண்ட் ஒயிட்டுயா!"
(பி.கு: சமீபத்தில் முகப்புத்தகத்தில் பார்த்த பாடல் ஒன்றில் தர்மேந்திரா யங்மேந்திராவாக கருப்பு வெள்ளையில் சிரித்தபடி நடந்து கொண்டிருந்தார்.)

டாக்டர் / டெய்லர்
முன்னாள் அலுவலகத்தில் உடன் பணிபுரிந்த பெண் கேட்டார்,"என்ன சார் ரெண்டு நாளாஆளக் காணாம்?". நான் உடம்பு சரியில்லாமல் இருந்ததென்று சொன்னேன். அவர் " டாக்டரப் பாத்தீங்களா?" என்றார். அந்தக் கேள்விக்கு நான் ஐந்து நிமிடங்கள் பதில் சொன்னேன். "டாக்டர்களையும் டெய்லர்களையும் நம்புவதைவிட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டது.", என்று ஆரம்பித்து டாக்டர்களை வறுத்து எடுத்தேன். திடீரென்று ஏதோ அந்தக் கேள்வியைக் கேட்கத் தூண்டியது. "ஆமா மேடம்! உங்க ஹஸ்பெண்ட் என்ன வேல பாக்கிறாரு?". வந்த பதில்," டாக்டர்!". அசடு வழிந்து "டாக்டர் சாரக் கேட்டதாச் சொல்லுங்க!" என்றேன்.

தாம்பாள சுப்ரமணியம்
 கல்லூரிப் பருவத்தில் அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது பத்திரிக்கையில் படித்த செய்தி ஒன்றை அத்தையிடம் சொன்னேன். சென்னையில் ஒரு தெருவிற்கு T.A.M பாலசுப்ரமணியம் தெரு என்று பெயர். புள்ளிகள் காலப்போக்கில் அழிந்துவிட தாம்பாள சுப்பிரமணியம் தெரு என்றாகி விட்டது. அந்த T.A.M பாலசுப்ரமணியம் முன்பு பாத்திர வியாபாரம் செய்து வந்தாராம். இத்தகவலைச் சொல்லி முடித்ததும் என் மாமா பெயரும் பாலசுப்ரமணியம் என்று ஞாபகம் வர, அத்தையிடம் மாமாவின் இனிஷியல் என்ன என்று கேட்டேன்.அத்தை சொன்ன பதில் "மெல்லப் பேசுடா! T.A.M".

7 comments:

  1. Sir,

    very nice jokes, I really your kadi jokes.

    Naducot...

    -Anbu, AKCe 1993

    ReplyDelete
  2. Sir,

    See some jokes in my website

    www.chennaistudent.com

    Anbu

    ReplyDelete
  3. நன்றி அன்பு! உனது வெப்சைட்டில் ஜோக்குகளை ரசித்தேன். கணவன்,மனைவி,டிரைவிங் ஜோக்கு ரொம்பச் சிரிக்க வைத்தது.

    ReplyDelete
  4. வாசி இதுகளை அப்படியே காப்பியடிச்சு யாஹூ குழுவுல போட்டா என்னவாம். நாங்க அங்க க்ளிக்கி இங்க வந்து பார்க்கனுமாக்கும்... முடியாது... இது போங்கு ஆட்டம்!

    ReplyDelete
  5. ஹரி Kindly adjust. புறாவிடம் செய்தி அனுப்பினால் புறாவைப் படித்துக் காட்டச் சொல்லும் காலமிது. :)

    ReplyDelete
  6. SAMUTHIRAKANIApril 17, 2012

    VERY NICE COMEDY INCIDENTS

    ReplyDelete