Sunday, April 3, 2011

கவிதைகள் - கறுப்பு வெள்ளை/கரப்பான் பூச்சியும் நானும்

கறுப்பு வெள்ளை 
கலரில் படைக்காமல்
கறுப்பு வெள்ளையில்   
கடவுள் 
உலகைப் படைத்திருந்தால்!
கலர் டிவி இருக்காது
கலர் போட்டோ இருக்காது
கலர் சாக்பீஸ் இருக்காது!
அப்பவும்
நிறவெறி இருக்கும்!

கரப்பான் பூச்சியும் நானும் 




சின்ன வயதில் எனக்குக் 
கரப்பான் பூச்சி கண்டால் 
கொலை நடுக்கம்.
இப்போது பயமில்லை.
என் உருவம் பெரியதாகிவிட்டதாலா!
ஆயினும் கரப்பான் பூச்சிகள்
எப்போதும் போல் 
நடந்து கொள்கின்றன

2 comments:

  1. நண்பா,

    எங்க நீங்க கடிச்சதுல ரத்தம் கலர் மாரிருமோனு பயந்து பயந்து பார்த்தேன், நல்லவேள சிகப்பத்தான் வந்திச்சு.
    கடவுளுக்கு நன்றி!

    ReplyDelete
  2. என் வரிகளை விட உங்கள் கமெண்ட் க்ரியேட்டிவ்வாக இருக்கிறது. மேலும் உங்களை க்ரியேட்டிவ் கமெண்ட் கொடுக்கத் தூண்டுவேன்.

    ReplyDelete