|
வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும். கருத்துப் பரிமாற்றங்களுக்காகவும்... To share the life's experiences and to exchange opinions
Wednesday, January 26, 2011
ஆட்டோ பெயரும் வரிகளும்..& சிறுமியும் கொண்டைக்காரரும்..
A funny story - A hotel server gets selected in an IT interview by mistake
A hotel server attends an interview in an IT company by mistake. However he gets selected.
I: What kind of server you have used?
C: Server? I'm a dedicated server.
I: Good. What is your user interface?
C: I don't get you,Sir!
I: I mean, what do you show to your customer?
C: Menu,Sir!
I: Do you know Cobol?
C: Gopal is my friend,Sir!
I: Oh, you know Cobol as you know your friend. Fine.
Do you have knowledge of hardware?
C: I used to accompany my boss to the hardware store.
Some of my friends are making chips.
I: Thats great. Tell about Sun, Windows and Apple.
C: Because of Sun, we need windows. Most of our customers like apples.
I: Next 2 questions will test your sense of humour.
C: OK, Sir!
I: Your password is going to expire, what will you do?
C: Expire? I will cry,Sir!
I: That's good. What is the difference between Microsoft excel and Surf excel.
C: Microsoft excel is for spreadsheet. Surf excel is for bed sheet.
I: Its funny.Pl. elaborate on Order entry system.
C:Customers place orders. The items are prepared and delivered to the customers.
I: Where exactly the items are placed?
C: The items are placed on the tables. In one row, there will be many tables.
I: I think that's a slip of tongue. In one table, there will be many rows.
Do you have experience in Hotel management system?.
C: I have 5 years experience, Sir.
I: Thats cool. You are appointed.
Friday, January 21, 2011
எனது அமெரிக்கப் பயணம்-லண்டனிலிருந்து சென்னைக்கு - பகுதி 2 - தொடரின் நிறைவு
வானத்தில் பார்த்த மற்றொரு படம்,ராஜ்நீதி.அரசியலை மையமாக வைத்து எடுத்த படம். மஹாபாரதக் கர்ணன் கதையை தற்கால அரசியலில் ஊற்றி ஆற்றியிருக்கிறார்கள். சும்மா வைத்திருந்தாலே சிரிப்பது போல் தெரியும் உதடுகளைக் கொண்ட கேட்ரினா கைஃப் நான் பார்த்த ஹிந்திப் பாடல்களில் உற்சாகமாக இடுப்பொடித்து ஆடிக்கொண்டிருப்பார். இந்தப் படத்தில் அவரை நன்றாக கண்ணீரும் கம்பலையுமாக அழ வைத்திருக்கிறார்கள். சாட்சிக்கு ஒரு காட்சி கீழே!
அமெரிக்கா கிளம்புமுன் +2 நண்பன் ஹரியிடம் பேசிய போது, அங்கு இசையில் தற்போதைய ட்ரெண்ட் பற்றிச் தெரிந்து சொல்லச் சொல்லியிருந்தான். ’நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன்’ என்று சின்சியராக ஒரு விமானத்தில் நான் குறித்துக் கொண்ட பாப் பாடல்களின் விவரம் கீழே. டாஷ் கோட்டிற்கு அடுத்து வருவது ஆல்பம். சிலவற்றில் வெறும் பாடகரின் பெயர் மட்டும் இருக்கும்.
A ha
Arcade fire - Suburbs
Bombay bicycle club flaws
Brandon flowers flamingo
Chemical brother - Further
The Coral - Butterfly house
Crowded house - Intriguer
Danger mouse and sparkle horse
Eliza doolittle
Faithless - The dance
I am kloot - sky at night
Klaxons - surfing the void
Kylie Minogue - Aphrodite
Lcd sound system
Leonard cohen
Miley Cyrus - Can't be tamed
Natalie merchant
Nick cave
Oasis - Time flies
Oliver lang
Paul oakenfold
Paul weller
Richard ashcroft
Rufus wainwright
Scissors sisters - Night work
Sheryl crow
Slash
Steve mason - Boy outside
Tired pony
I heart birmingham
Bristol
Mama chester
ஒரு தமிழ்ப்பிராட்டி பின்பக்கம் அடிக்கடி போய் சாக்லேட் வாங்கிக் கொண்டு வந்தார். நான் பாதையை ஒட்டி இருந்த சீட்டிலிருந்து சீட் கைப்பிடியோடு மல்லுக்கட்டி எழுந்து வெளியே வந்ததைப் பார்த்து ‘ஒரு பட்டனைத் தட்டினா சீட் கைப்பிடியை வெளியே தள்ளி விட்ரலாம்’ என்று சொல்லிக் கொடுத்தார். புடவை அணிந்த அந்த மூதாட்டியைப் பார்த்ததும், சென்னை வானுக்கு வந்தது மாதிரி இருந்தது. லண்டனில் சர்தார்ஜி ஓட்டுனர்களைப் பார்த்ததும் புல்லரித்த என் நாட்டுப் பற்றுக்கு இது புதிதல்ல.
சென்னையில் விமானம் நின்றவுடன் Cabin luggageஐ எடுப்பதில் ஒரு சுயநலமான வேகம்..Check in baggage claim இடத்தில் ஒரு பரபரப்பு.. நான்,நீ என்ற போட்டி.. நம் ஊர் மனப்பான்மை எங்க போயிருந்தாய் ஒரு வாரம் என்று பாசத்துடன் வந்து ஒட்டிக் கொண்டது.
ஒவ்வொரு விமானப் பயணமும் ஒரு தெளிவைக் கொடுக்கிறது.
இறங்குவோமா? என்ற பயம். நடப்பது தான் நடக்குமென்ற ஞானம்.
இந்தப் பயணத்தை எழுத ஆரம்பித்தது, சுற்றி நடக்கும் விசயங்களைக் கண்காணிக்கும் பழக்கம் அதிகமானது. வெறுமனெ உட்கார்ந்து கடுப்படிக்கும் தருணங்களும் கவனிக்கக் கவனிக்கச் சுவாரசியமானது.சில சமயம் கவனிக்கும் போதே, எப்படி எழுத வேண்டும் என்று தோன்றும் போது..ஒரு இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டது போல இருந்தது.
நன்றிகள்:
தமிழில் டைப் செய்வதை அறிமுகம் செய்த அலுவலக நண்பர் சையது, தமிழ் டைப்பிங்கிற்குச் சில மென்பொருள்களை அறிமுகம் செய்த கணினி வித்தகன் தமிழையா நண்பன் ஹரி, இத்தொடரை டைப் செய்ய உதவிய மென்பொருளை அறிமுகப் படுத்திய நண்பன் தனபாலன், என் எழுத்துக்களை ஊக்குவித்த என் ப்ளஸ் டூ யாஹூ க்ரூப் நண்பர்கள்,என் எழுத்தை ஊக்குவிக்கும், சமூகசேவைக்காக அமெரிக்க கென்டக்கி மாகாண ஆளுநர் விருது பெற்ற அலுவலக நண்பர் மகேந்திரன், நான் சில பகுதிகளை அடித்து முடித்தவுடன் படித்துக் கருத்துச் சொல்லி சில மாற்றங்கள் சொன்ன என் மனைவி, ஆகியோருக்கு என் நன்றிகள்.
ஒரு Flash back: US trip க்கு மூன்று நாட்களுக்கு முன்பு, நண்பர்
ஒருவரிடம் இந்த ட்ரிப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் ஜாலியாகப் பேசியதால் அவரும் ஜோக் சொல்வதாக நினைத்து ’ஹை ஜாக்’ பண்றவங்க ப்ளேனில சுத்திக் கிட்டே இருப்பாங்களான்னு கேட்டு எரிச்சலைக் கிளப்பினார்.அடுத்து அவரைப் பார்க்கும் போது முதல் வேலையாக
ஒரு பிடி பிடிக்க வேண்டும்.
எனது அமெரிக்கப் பயணம்-லண்டனிலிருந்து சென்னைக்கு - பகுதி 1
மீண்டும் லண்டன். எதற்கும் நேரம் இல்லை. டெர்மினலுக்கு ஓடிச் சென்னை விமானத்தில் ஏற வேண்டும். நாம் பெட்டிகளை இழுத்துக் கொண்டு ஓடும் போது, சங்கர் கணேஷ் நன்றி விலங்கு ஓடும் போது கொடுக்கும் ‘டிடிங் டிங்குடக்கா டிங்’ தான் பேக்க்ரொண்ட்டில் கேட்கிறது.
FT Week end, Independent, Spirit magazine போன்ற காம்ப்ளிமெண்டரி படிக்கும்
வஸ்துகளை நான் மொத்தமாக எடுத்துக் கொண்டு ப்ளேனில் என் இடம் தேடிப் போன போது ஒரு தம்பதி நக்கல் சிரிப்பு சிரித்தார்கள். நான் அந்தப் பேப்பர்களை என் பசங்க பார்ப்பதற்காக எடுத்துச் செல்கிறேன். இவர்கள் சிரித்தாலென்ன அழுதாலென்ன? Its my Life.
பின்புறம் சென்றேன் காபி கேட்க. காபி வாங்கி அங்கேயே நின்று
குடித்துக்கொண்டிருந்தான் ஒருவன். "நீங்க சென்னையா?" என்றேன். ரொம்ப பிகு பண்ணிக்கொண்டு "கொச்சின்" என்றான். இன்னொருவர் அவனிடம் "ஆர் யு from US ? " என்றதற்கு, "nicaragua " என்றான். சிரிக்கக்கூடத் தெரியாத அவனிடம் நான் பேசத்தயாரில்லை. அவன் எங்கிருந்து வந்தால் நமக்கு என்ன. கொஞ்ச நேரம் கழித்துப் பின்னால் போன போதும் கொச்சின் ஏதோ குடித்துக் கொண்டிருந்தான். நானும் வீம்புக்கு காபி வாங்கிக் குடித்தேன். வாயை அவன் சாப்பிட அதிகம் பயன் படுத்துகிறான் என்று தெரிந்தது.
குடித்துக்கொண்டிருந்தான் ஒருவன். "நீங்க சென்னையா?" என்றேன். ரொம்ப பிகு பண்ணிக்கொண்டு "கொச்சின்" என்றான். இன்னொருவர் அவனிடம் "ஆர் யு from US ? " என்றதற்கு, "nicaragua " என்றான். சிரிக்கக்கூடத் தெரியாத அவனிடம் நான் பேசத்தயாரில்லை. அவன் எங்கிருந்து வந்தால் நமக்கு என்ன. கொஞ்ச நேரம் கழித்துப் பின்னால் போன போதும் கொச்சின் ஏதோ குடித்துக் கொண்டிருந்தான். நானும் வீம்புக்கு காபி வாங்கிக் குடித்தேன். வாயை அவன் சாப்பிட அதிகம் பயன் படுத்துகிறான் என்று தெரிந்தது.
ஏர் ஹோஸ்டசில் ஒரு ஆள் இருந்தான். பொதுவாக லேடீஸ் பார்க்கும் வேலையில் இவன் எப்படி? நான் பின் புறம் போய் காபி கேட்ட போது, ஏதோ உதடு குவித்துக் கொஞ்சுவது போல் மூஞ்சியை வைத்துக்கொண்டு, "டூ மினிட்ஸ் சார்" என்றான். ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். தோளைத் தொட்டுக் கூப்பிட்டுக் காபி கொடுத்தான். ஸ்டிர் பண்ண ஏதாவது குடுங்க என்றேன். மயக்கும் குரலில் "ஓஹ், stirrer " என்றபடி எடுத்துக் கொடுத்தான். பேப்பர் டம்ளரைக் கொடுத்த போது கையைத் தொட்டு வாங்கினான். இவனை ஏன் இந்த வேலைக்கு எடுத்தார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைத்தது.
பக்கத்து சீட்களில் இருவர் பேசிக்கொண்டனர்.இளைஞன் U.K. பெரியவர் U.S. பெரியவர் நெட்வொர்க் லைனில் வேலை பார்க்கிறார். ஐபோன் வந்து தொழிலைக் கொஞ்சம் பாதித்த விட்டதாகச் சொன்னார்.இளைஞன் U.K யில் டென்டிஸ்ட். பெரியவர் எடுத்த பேட்டியில் அவன் இனிய பிரிட்டிஷ் அச்சென்ட்டில் சொன்னது...
U.S போவது அவன் aim . அங்கு அவனுக்கு ஏனோ நல்ல வாய்ப்பு கிடைக்க வில்லை. பேப்பரில் U.K யில் டென்டிஸ்ட்களுக்கு
நல்ல டிமாண்ட் இருக்கும் செய்தி பார்த்து அங்கு போனானாம். முதலில் இரு வருடம் படிக்கவேண்டி இருந்ததாம். இப்போது செட்டில் ஆகி விட்டானாம்.பிடித்தது scuba diving , traveling . இரு கைகளையும் பிரிட்டிஷ் உடல் மொழி படி ஆட்டிக்கொண்டு அவன் விதம் விதமான tax பற்றிச் சொன்னபோது அவனின் விஷய ஞானம் தெரிந்தது.
எல்லாவற்றையும் நான் FT , Independent போன்ற காம்ப்ளிமென்டரி பேப்பர்களைப் படிப்பது போல் பார்த்துக்/கேட்டுக் கொண்டிருந்தேன். நான் எதுவும் பேசித் தொந்திரவு செய்யவில்லை.என் கடமையை அந்தப் பெரியவர் ஏற்கனவே செய்து கொண்டிருந்தார்.
Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/2_21.html
Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/2_21.html
Saturday, January 15, 2011
எனது அமெரிக்கப் பயணம்-டல்லாஸிலிருந்து லண்டனுக்கு
|
Wednesday, January 12, 2011
எனது அமெரிக்கப் பயணம்-டெட்ராய்ட்டிலிருந்து டல்லாஸிற்கு - பகுதி 2
|
Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/blog-post_15.html
Saturday, January 8, 2011
எனது அமெரிக்கப் பயணம்-டெட்ராய்ட்டிலிருந்து டல்லாஸிற்கு - பகுதி 1
|
Subscribe to:
Posts (Atom)