வானத்தில் பார்த்த மற்றொரு படம்,ராஜ்நீதி.அரசியலை மையமாக வைத்து எடுத்த படம். மஹாபாரதக் கர்ணன் கதையை தற்கால அரசியலில் ஊற்றி ஆற்றியிருக்கிறார்கள். சும்மா வைத்திருந்தாலே சிரிப்பது போல் தெரியும் உதடுகளைக் கொண்ட கேட்ரினா கைஃப் நான் பார்த்த ஹிந்திப் பாடல்களில் உற்சாகமாக இடுப்பொடித்து ஆடிக்கொண்டிருப்பார். இந்தப் படத்தில் அவரை நன்றாக கண்ணீரும் கம்பலையுமாக அழ வைத்திருக்கிறார்கள். சாட்சிக்கு ஒரு காட்சி கீழே!
அமெரிக்கா கிளம்புமுன் +2 நண்பன் ஹரியிடம் பேசிய போது, அங்கு இசையில் தற்போதைய ட்ரெண்ட் பற்றிச் தெரிந்து சொல்லச் சொல்லியிருந்தான். ’நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன்’ என்று சின்சியராக ஒரு விமானத்தில் நான் குறித்துக் கொண்ட பாப் பாடல்களின் விவரம் கீழே. டாஷ் கோட்டிற்கு அடுத்து வருவது ஆல்பம். சிலவற்றில் வெறும் பாடகரின் பெயர் மட்டும் இருக்கும்.
A ha
Arcade fire - Suburbs
Bombay bicycle club flaws
Brandon flowers flamingo
Chemical brother - Further
The Coral - Butterfly house
Crowded house - Intriguer
Danger mouse and sparkle horse
Eliza doolittle
Faithless - The dance
I am kloot - sky at night
Klaxons - surfing the void
Kylie Minogue - Aphrodite
Lcd sound system
Leonard cohen
Miley Cyrus - Can't be tamed
Natalie merchant
Nick cave
Oasis - Time flies
Oliver lang
Paul oakenfold
Paul weller
Richard ashcroft
Rufus wainwright
Scissors sisters - Night work
Sheryl crow
Slash
Steve mason - Boy outside
Tired pony
I heart birmingham
Bristol
Mama chester
ஒரு தமிழ்ப்பிராட்டி பின்பக்கம் அடிக்கடி போய் சாக்லேட் வாங்கிக் கொண்டு வந்தார். நான் பாதையை ஒட்டி இருந்த சீட்டிலிருந்து சீட் கைப்பிடியோடு மல்லுக்கட்டி எழுந்து வெளியே வந்ததைப் பார்த்து ‘ஒரு பட்டனைத் தட்டினா சீட் கைப்பிடியை வெளியே தள்ளி விட்ரலாம்’ என்று சொல்லிக் கொடுத்தார். புடவை அணிந்த அந்த மூதாட்டியைப் பார்த்ததும், சென்னை வானுக்கு வந்தது மாதிரி இருந்தது. லண்டனில் சர்தார்ஜி ஓட்டுனர்களைப் பார்த்ததும் புல்லரித்த என் நாட்டுப் பற்றுக்கு இது புதிதல்ல.
சென்னையில் விமானம் நின்றவுடன் Cabin luggageஐ எடுப்பதில் ஒரு சுயநலமான வேகம்..Check in baggage claim இடத்தில் ஒரு பரபரப்பு.. நான்,நீ என்ற போட்டி.. நம் ஊர் மனப்பான்மை எங்க போயிருந்தாய் ஒரு வாரம் என்று பாசத்துடன் வந்து ஒட்டிக் கொண்டது.
ஒவ்வொரு விமானப் பயணமும் ஒரு தெளிவைக் கொடுக்கிறது.
இறங்குவோமா? என்ற பயம். நடப்பது தான் நடக்குமென்ற ஞானம்.
இந்தப் பயணத்தை எழுத ஆரம்பித்தது, சுற்றி நடக்கும் விசயங்களைக் கண்காணிக்கும் பழக்கம் அதிகமானது. வெறுமனெ உட்கார்ந்து கடுப்படிக்கும் தருணங்களும் கவனிக்கக் கவனிக்கச் சுவாரசியமானது.சில சமயம் கவனிக்கும் போதே, எப்படி எழுத வேண்டும் என்று தோன்றும் போது..ஒரு இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டது போல இருந்தது.
நன்றிகள்:
தமிழில் டைப் செய்வதை அறிமுகம் செய்த அலுவலக நண்பர் சையது, தமிழ் டைப்பிங்கிற்குச் சில மென்பொருள்களை அறிமுகம் செய்த கணினி வித்தகன் தமிழையா நண்பன் ஹரி, இத்தொடரை டைப் செய்ய உதவிய மென்பொருளை அறிமுகப் படுத்திய நண்பன் தனபாலன், என் எழுத்துக்களை ஊக்குவித்த என் ப்ளஸ் டூ யாஹூ க்ரூப் நண்பர்கள்,என் எழுத்தை ஊக்குவிக்கும், சமூகசேவைக்காக அமெரிக்க கென்டக்கி மாகாண ஆளுநர் விருது பெற்ற அலுவலக நண்பர் மகேந்திரன், நான் சில பகுதிகளை அடித்து முடித்தவுடன் படித்துக் கருத்துச் சொல்லி சில மாற்றங்கள் சொன்ன என் மனைவி, ஆகியோருக்கு என் நன்றிகள்.
ஒரு Flash back: US trip க்கு மூன்று நாட்களுக்கு முன்பு, நண்பர்
ஒருவரிடம் இந்த ட்ரிப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் ஜாலியாகப் பேசியதால் அவரும் ஜோக் சொல்வதாக நினைத்து ’ஹை ஜாக்’ பண்றவங்க ப்ளேனில சுத்திக் கிட்டே இருப்பாங்களான்னு கேட்டு எரிச்சலைக் கிளப்பினார்.அடுத்து அவரைப் பார்க்கும் போது முதல் வேலையாக
ஒரு பிடி பிடிக்க வேண்டும்.
வாசி, ஒரு அருமையான பயணம் செய்து வந்த திருப்தி வந்தது உன் கட்டுரைகளைப் படித்த பின். அடுத்து எப்போது, எங்கு போகப் போகிறாய்? நீ வெளிநாடு போயோ அல்லது பயணம் செய்தோதான் எழுத வேண்டும் என்றில்லை. தினமும் உன் அலுவலகத்தில் நடக்கும் விஷயங்களையும், காய்கறி வாங்கப் போன இடத்தில (போவாயா?) நடக்கும் விஷயங்களையும் எழுதலாம். அதனால் அடுத்த பயணம் போகும் வரை எழுத விடுப்பு விடாதே;-)
ReplyDeleteஸ்ரீகாந்த்.
டியர் வாசி(பன்),
ReplyDeleteமுதலில் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
நான் இதை படிக்கும் போது எனக்கு நம்முடைய கல்லூரி நினைவுகள் தான் வரும். படிக்கும் போது மனம் விட்டு சிருச்சேன். பழைய நினைவுகளும் வந்தது அதோடு சேர்ந்து.
நண்பர் ஸ்ரீகாந்த் சொன்னது போல் நீங்கள் உங்களுடைய நடப்பு அனுபவங்கல தொடர்ந்து எழுதவேண்டும் என்பது என்னோட ஆசையும் ஆர்வமும் கூட. வாழ்கையில் நடக்கும் சில விஷயங்களை இந்தமாதிரி எடுத்து சொன்னதான் ரொம்ப புரியும். கவிங்கர் கண்ணதாசன் ஒரு பாடலில் "கூந்தல் கருப்பு, குங்குமம் சிவப்பு" என்பார். எல்லோர்க்கும் தெரியும் அது. அனால் அதை கவிதையாக அல்லது நடைமுறையாக அனுபவத்தை எடுத்து சொல்லும்போதுதான் அதன் அருமை, அர்த்தம் புரியும்.
எனவே தாங்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதும் என்னோட ஆசை, வேண்டுகோள்.
வாழ்த்துக்கள்! நன்றி!
சுரேஷ் நடராஜன்
அன்பு நண்பர்கள் ஶ்ரீ/சுரேஷ்,
ReplyDeleteநன்றிகள் உங்கள் வாசிப்புக்கு,பாராட்டுக்கு!வாசி என்று பெயர் இருப்பதால் நான் எழுதி நானே(மட்டுமே)வாசித்துக் கொண்டிருக்க முடியாது.
என் எழுத்து நண்பர்களைச் சந்தோஷப்படுத்துகிறது என்ற நினைப்பு ஒன்றே என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டும்.
- வாசி
Very good post. I enjoyed reading this full episode for the past one hour. Enjoyed every bit of your writing. you have writers skill.
ReplyDeleteThanks MGR Roop. Happy that you enjoyed my writing and it encourages me a lot.
ReplyDeleteDear Vasi, enjoyed reading your writing on your travel to America and other day-today activities, thanks.
ReplyDeleteThanks for your comments, Kannan.
Delete