ஒரு வழியாக டல்லாஸ் போவதற்கு விமானத்தில் ஏறியாகி விட்டது. எனக்கு ஒரு சீட் தள்ளி உட்கார்ந்தது நம்ம ஊருப் பையன். பெயர் ஹேமந்த். வெட்டிப் பீட்டர் விடாமல் நேரடியாகத் தமிழில் பேசினேன். அவன் ஊர் சித்தூர். படித்தது பாண்டியில்,அதனால் தமிழ் சரளம். 4 வருடம் மென்பொருள் வேலை. இப்போது U.Sல M.B.A படிப்பு. நாங்கள் கலகலப்பாகப் பேச ஆரம்பித்ததும், ஹேமந்த் ”அங்க ஒருத்தர் தனியா இருக்காரு. அவரயும் கூப்பிடலாம்,அவரு முதல் தடவ ட்ராவல் பண்றாரு” என்றான்.
ஏர் ஹோஸ்டஸ் கிட்ட சொல்லி அந்த ’அவரை’ எனக்கும் ஹேமந்த்துக்கும் இடையில் இடம் மாற்றினோம். உட்காரப் போகும் போது, அவர் “நீங்க A.K.Collegeல் படிச்சீங்களா?” என்றார். நான் படிக்கும் போது ஜீனியர் ஆக இருந்து, பின் அங்கு வேலை பார்க்கும் போது மாணவராக இருந்தவர். மேலும் முகிலனின் சொந்த ஊர் தேனிப் பக்கம் தான்.
மேலே உள்ள 2 பாராக்களுக்கு நீங்கள் ‘நடு வானில் நண்பன்’ என்ற தலைப்பைச் சூட்ட விரும்பினால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
பசி குடலைப் பிடுங்கியது. முகிலனுக்கும்,ஹேமந்த்துக்கும் அதே நிலை.
அவர்களிடம் என்ன இப்படி வானத்தில அம்மா பசிக்குதேன்னு சொல்ல வச்சிட்டாங்க என்று முனகினேன். ஒரு வழியாக ஜீஸ் கொண்டு வந்தார்கள்.
பச்சையாகக் கேட்டேன், “Will you bring the other stuff" என்று. இந்தக் கேள்வியைக் கேட்ட போது, வலது கையை வாய்ப் பக்கம் கொண்டு போகும் நம்மூர் சைகையைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.இந்தப் பயணத்தில் என் நகைச்சுவை உணர்வு வறண்டு போனது அச்சமயம் தான்.பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பார்களே! (அந்த பத்து எது என்று நண்பர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும்)
|
No comments:
Post a Comment