Friday, January 21, 2011

எனது அமெரிக்கப் பயணம்-லண்டனிலிருந்து சென்னைக்கு - பகுதி 1

மீண்டும் லண்டன். எதற்கும் நேரம் இல்லை. டெர்மினலுக்கு ஓடிச் சென்னை விமானத்தில் ஏற வேண்டும். நாம் பெட்டிகளை இழுத்துக் கொண்டு ஓடும் போது, சங்கர் கணேஷ் நன்றி விலங்கு ஓடும் போது கொடுக்கும் ‘டிடிங் டிங்குடக்கா டிங்’ தான் பேக்க்ரொண்ட்டில் கேட்கிறது. 

FT Week end, Independent, Spirit magazine போன்ற காம்ப்ளிமெண்டரி படிக்கும் 
வஸ்துகளை நான் மொத்தமாக எடுத்துக் கொண்டு ப்ளேனில் என் இடம் தேடிப் போன போது ஒரு தம்பதி நக்கல் சிரிப்பு சிரித்தார்கள். நான் அந்தப் பேப்பர்களை என் சங்க பார்ப்பதற்காக எடுத்துச் செல்கிறேன். இவர்கள் சிரித்தாலென்ன அழுதாலென்ன? Its my Life.  

பின்புறம் சென்றேன் காபி கேட்க. காபி வாங்கி அங்கேயே நின்று
குடித்துக்கொண்டிருந்தான் ஒருவன். "நீங்க சென்னையா?" என்றேன். ரொம்ப பிகு பண்ணிக்கொண்டு "கொச்சின்" என்றான். இன்னொருவர் அவனிடம் "ஆர் யு from US ? " என்றதற்கு, "nicaragua " என்றான். சிரிக்கக்கூடத் தெரியாத அவனிடம் நான் பேசத்தயாரில்லை. அவன் எங்கிருந்து வந்தால் நமக்கு என்ன. கொஞ்ச நேரம் கழித்துப் பின்னால் போன போதும் கொச்சின் ஏதோ குடித்துக் கொண்டிருந்தான். நானும் வீம்புக்கு காபி வாங்கிக் குடித்தேன். வாயை அவன் சாப்பிட அதிகம் பயன் படுத்துகிறான் என்று தெரிந்தது.

ஏர் ஹோஸ்டசில் ஒரு ஆள் இருந்தான். பொதுவாக லேடீஸ் பார்க்கும் வேலையில் இவன் எப்படி? நான் பின் புறம் போய் காபி கேட்ட போது, ஏதோ உதடு குவித்துக் கொஞ்சுவது போல் மூஞ்சியை வைத்துக்கொண்டு, "டூ மினிட்ஸ் சார்" என்றான். ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். தோளைத் தொட்டுக் கூப்பிட்டுக் காபி கொடுத்தான். ஸ்டிர் பண்ண ஏதாவது குடுங்க என்றேன். மயக்கும் குரலில் "ஓஹ், stirrer " என்றபடி எடுத்துக் கொடுத்தான். பேப்பர் டம்ளரைக் கொடுத்த போது கையைத் தொட்டு வாங்கினான். இவனை ஏன் இந்த வேலைக்கு எடுத்தார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைத்தது. 

பக்கத்து சீட்களில் இருவர் பேசிக்கொண்டனர்.இளைஞன் U.K. பெரியவர் U.S. பெரியவர் நெட்வொர்க் லைனில் வேலை பார்க்கிறார். ஐபோன் வந்து தொழிலைக் கொஞ்சம் பாதித்த விட்டதாகச் சொன்னார்.இளைஞன் U.K யில் டென்டிஸ்ட். பெரியவர் எடுத்த பேட்டியில் அவன் இனிய பிரிட்டிஷ் அச்சென்ட்டில் சொன்னது...
U.S போவது அவன் aim . அங்கு அவனுக்கு ஏனோ நல்ல வாய்ப்பு கிடைக்க வில்லை. பேப்பரில் U.K யில் டென்டிஸ்ட்களுக்கு 
நல்ல டிமாண்ட் இருக்கும் செய்தி பார்த்து அங்கு போனானாம். முதலில் இரு வருடம் படிக்கவேண்டி இருந்ததாம். இப்போது செட்டில் ஆகி விட்டானாம்.பிடித்தது scuba diving , traveling . இரு கைகளையும் பிரிட்டிஷ் உடல் மொழி படி ஆட்டிக்கொண்டு அவன் விதம் விதமான tax பற்றிச் சொன்னபோது அவனின் விஷய ஞானம் தெரிந்தது.    
எல்லாவற்றையும் நான் FT , Independent போன்ற காம்ப்ளிமென்டரி பேப்பர்களைப் படிப்பது போல் பார்த்துக்/கேட்டுக் கொண்டிருந்தேன். நான் எதுவும் பேசித் தொந்திரவு செய்யவில்லை.என் கடமையை அந்தப் பெரியவர் ஏற்கனவே செய்து கொண்டிருந்தார். 

Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/2_21.html 

No comments:

Post a Comment