Sunday, January 2, 2011

எனது அமெரிக்கப் பயணம்-லண்டனிலிருந்து டல்லாஸ் - பகுதி 1

Dabangg சல்மான் கானின் நடனம் பற்றிக் குறிப்பிட மறந்து விட்டேன். அவருக்கு நல்ல நடிப்புத் திறமை. டான்ஸ் ஆடுவது போலவும் நடிக்கிறார்.  
   
லண்டனை நோக்கி விமானம் கீழெ இறங்கும் போது, ஒரு துள்ளல் இசை க்ளாசிக்கல் பாணியில் ஒலித்தது,பயத்தைப் போக்கி ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியது. டயர்கள் ரன் வேயைத் தொட்டவுடன் “Thanks for flying B.airways . See you next time . " என்று போட்டது நல்ல டைமிங்.   

   என் கடிகாரத்தை நான் லோக்கல் டயத்திற்கு மாற்றி வைத்துக்கொண்டேன்.  லண்டனில் கால் வைக்கப் போகிறோம் என்றதும் என் எதிர்பார்ப்பு கூடியது. முன்னூறு+ ஆண்டுகளாக நம் நாட்டை அடிமையாக வைத்திருந்த  நாட்டின் தலைநகரம். லண்டன் ஏர் போர்ட்டில் இறங்கியதும், முதல் வேளையாக டாய்லெட் தேடி ஒன்ஸ் போனேன். ஏதோ நம்மால் ஆனது... 

டல்லாஸ் பறக்கும் வண்டிக்குப் போக 2 மணி நேரம். டெர்மினல் தேடி ஓடி 
கைச்சுமையை X-Ray வண்டிக்குக் காட்டி(அப்பாடா லண்டனின் புகழ் பெற்ற Big Ben கடிகாரம் நம் பொட்டியில் இல்லை), நம்ம உடம்பிலும் அவர்கள் நாட்டுப் பொருள் இல்லை என்று நிரூபித்து..இயற்கை அழைப்பை மதித்து ... இவை எல்லாம் அந்த 2 மணி நேரத்தில் செய்ய வேண்டும்.  

    நம் உடம்பைப் பரிசோதிக்க, கதவு இல்லாமல் வெறும் நிலை மட்டும் இருக்கும் அந்த நிலைக்குள் நுழையச் சொல்கிறார்கள். நான் சரணடையும் ஜேம்ஸ் பாண்ட் போல் இரு கைகளையும் தூக்கிக் கொண்டு செல்ல, அங்கிருந்த அதிகாரி, எனக்கு எப்படி வர வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தான். அது காதலில் தோல்வியுற்ற இந்திப் பட ஹீரோ நடப்பது போல் இரு கைகளையும் தொங்கப்போட்டுக் கொண்டு நடப்பது. அப்போது முக பாவனை எப்படி வைக்க வேண்டும், தலையை எப்படி சீவி இருக்க வேண்டும் என்றெல்லாம் கேட்டு அந்த அதிகாரியை நான் நோகடிக்கவில்லை, நேரம் இல்லாத்தால். 

  லண்டன் ஏர் போர்ட்டில் பல சர்தார்ஜிக்கள் வாகன ஓட்டிகளாகப் பணியில் இருந்தார்கள். அவர்களைக் கண்டதும் மனதில் ஒரு நிம்மதி. ஏதாவது பிரச்சனைன்னா ஒரு சர்தார் மாமாவிடம் உதவி கேட்கலாம் என்று தான். லண்டன் ஏர் போர்ட்டில் வெள்ளையம்மாக்களும் கறுப்பாயிகளும் இங்குமங்கும் போய்க் கொண்டிருந்தார்கள்.கொய்யால... பாரதிராஜா பக்கத்து ஊர்க்காரனுக்கு இப்படித் தோன்றியதில் ஆச்சரியம் இல்லை. 

   ஆனால் London to Dallas விமானத்தில் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது. அது...


Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/2.html

4 comments: