காலை 6 மணிக்கே சாப்பிடும் இடம் களை கட்டி இருந்தது. அந்த ஹோட்டலில் தங்கி இருக்கும் பலர், ஹோட்டல் ஊழியர்களிடம் பழகுவதைப் பார்த்தால், அவர்கள் அங்கே நிரந்தரமாத் தங்கியிருப்பதாகத் தெரிந்தது.
அன்று அலுவலத்திற்குச் சென்ற போது நான் சந்திக்கச் சென்றவர்கள், வெளியே சென்றிருந்தனர். தனியே காத்திருந்தேன்.மதியம் jimmy johns gourmet sandwich ஆர்டர் செய்து வரவழைத்து,சாப்பிடக் கொடுத்தார்கள். வாவ்! ஜிம்மி ஜான்ஸ் சாண்ட்விச் கடைக்கு நான் ஹூஸ்டனில் இருந்த போது போயிருக்கிறேன். அந்தக் கடையின் சுவற்றில் உள்ள போஸ்டர்களில் நல்ல கருத்துக்கள் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் படித்து விட்டுத்தான் கடையை விட்டு வெளியே வந்தேன். மேலும் அந்த சாண்ட்விச்சின் சுவை ஞாபகத்தில் இருந்தது. அது மீண்டும் சாப்பிடக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தேன்.கீழே உள்ள இணைய தளத்தில் ஜிம்மி ஜான்ஸ் ஃபோட்டோவும் அங்குள்ள ஒரு போஸ்டரின் வாசகங்களும்.
வண்டி வரும் வரை அந்தக் கடையின் வெளியே காத்திருந்தேன். அந்தக் குளிருக்கு நான் போட்டிருந்த ஜெர்கின் சாதாரணமாக இருந்தது. குளிரில் நடுங்கினாலும் மீண்டும் கடைக்குள் போய் குளிருக்கு ஒதுங்க மனமில்லை. இப்படி பைசா பெறாத வில் பவர் சோதனை செய்து கொள்வதுண்டு.சிறிது நேரத்தில் வண்டி வந்து என்னை ’மீட்டு’ச் சென்றது.
சாப்பிடுபவர்களின் உடைகளைப் பார்த்தால் அவர்கள் துணி,சோப்பு,ஆடை போன்ற விளம்பரப் படங்களில் ஒரே நேரத்தில் நடித்து விட்டு நேரே சாப்பிட வந்தது போல் இருந்தது.நம் ஊரில் நம் ஆட்கள் கல்யாண நாள்,பிறந்த நாளில்
ஓரளவு பளிச்சென்றிருப்பார்கள்.
அதைவிட இன்னொரு முக்கியமான விசயம்.சாப்பிடுபவர்களிடம் இருந்த நிதானம். ஒரே நேரத்தில் தட்டை நிரப்பி சர்க்கஸில் பேலன்ஸ் வித்தை போல் நடக்கவில்லை. அவர்களின் ஒழுங்கும் கட்டுப்பாடும் ஆச்சரியப்படுத்தின. தட்டை எடுத்துக் கொண்டு உட்கார வரும் போது அவர்களின் சிறு வயது உருவம் தெரிவது போல் உண்ர்ந்தேன்.ஐந்தில் வளைந்தது ஐம்பதில் வளைகிறதோ?. அவர்கள் சாப்பிடும் போது அவசரப்படவில்லை. இருவரோ, நால்வரோ பேசிக்கொண்டு சாப்பிடுபவர்கள் பேச்சையும் சாப்பாட்டையும் ரசிக்கிறார்கள். அவசரமாய் சாப்பாட்டை முடித்து விட்டு புவி சூடாதலைத் தடுக்கும் பொத்தானை அழுத்த ஓடப் போவதில்லை என்று தெரிந்திருக்கிறார்கள்.
காலை உணவிற்குப் பல வகைகள் இருந்தன. எல்லாவற்றிலும் கொஞ்சம் சுவைத்து விடுவது என்று முடிவெடுத்தேன். நான் முடிவெடுத்துட்டேன்னா நானே சொன்னாலும் மாத்திக்க மாட்டேன். ”சே! இங்க வந்தும் த்மிழ்ப்பட பஞ்ச் டயலாக் பாதிப்பு போலயே!” எனக்கும் அன்று ஒன்றும் அவசரமில்லை.
அந்த அறையில் இருந்த தொலைக்காட்சியில் பார்த்த செய்திகள் இரண்டு.
1) அமெரிக்காவின் வரலாற்றில் இதுவரை குறைந்த பட்ச வெப்ப நிலை -80 F
(-62 C). இது கண்டிப்பாக நெஞ்சை உறைய வைக்கும் தகவல் தான்.
2) அமெரிக்காவில் ஒரு தனி நபர் 28 gallons (106 liters) ரத்த தானம் செய்திருக்கிறார், 50 வருடங்களில். ஒவ்வொரு முறை தானம் செய்யும் போதும் பெருமைப் படுவதாகச் சொல்கிறார் அவர்.
மல்டி க்ரெய்ன் டோ நட் என்ற அய்ட்டத்தை குச்சி வைத்துக் குத்தாத குறையாக வெறுமனே தின்று முடித்தேன். வேறு உணவை எடுக்கச் சென்ற போது அதே மல்டி க்ரெய்ன் டோ நட்டிற்கு ஒரு பாட்டி ஐந்து வகையான சிறு பாக்கெட்களில் உள்ள பேஸ்ட்களைத் தடவி அலங்காரம் பண்ணி அதை மிருதுவாக்கித் தின்று கொண்டிருந்தாள். அந்த நேர்த்தியான அலங்காரத்தைப் பார்த்த போது, இந்தப் பாட்டி சென்னை வந்து ஒரு கல்யாண வீட்டில் வெத்திலை பாக்கு போட நேர்ந்தால், கண்டிப்பாக வெத்திலையை முதலில் தின்று விட்டுப் பிறகு பாக்கைக் கொஞ்ச நேரம் சப்பி விட்டுக் கடைசியில் நாக்கில் சுண்ணாம்பைத் தடவ மாட்டாள் என்று தெரிந்தது. வெத்திலை பாக்கு தின்னும் முறையை நம் மக்களைப் பார்த்தோ, இல்லை அவர்களிடம் கேட்டோ தெரிந்து கொண்டிருப்பாள்.
ஒரு இடத்தில் அச்சுப் பாத்திரம் போல் ஒன்று சூடாக இருந்தது. அது Waffles செய்யும் உபகரணம். பக்கத்தில் ஒரு பேஸ்ட் பாக்கெட் இருந்தது. அருகில் ஒட்டியிருந்த குறிப்பைப் பார்த்தேன். அது ”பேஸ்ட்டை ஊற்றுங்கள்,மூடியை மூடுங்கள்,Waffles தயாரானதும்,ஒரு கரண்டியால் எடுத்து விடுங்கள்.சூடு ஜாக்கிரதை” என்றது. Waffles ஒரு அமெரிக்க அச்சுப் பனியாரம். நம் நாட்டு ஹோட்டலில் நம்மைக் காலை வேலையில் இது மாதிரி, பனியாரம் சுட்டுச் சாப்பிடச் சொன்னால், கொஞ்ச நாளில் ஹோட்டல் போய் அந்த இடத்தில் பனியாரக் கடை வந்து விடும். ஒரு வழியாகக் காலை உணவ்வ்வ்வு (கொஞ்சம் அதிகமாக உண்டதால் இத்தனை ’வ்’ ) முடிந்தது.
அந்த ஹோட்டலில் Wi-fi வசதி இருந்தது. அதுவும் ஃப்ரீ தான். என் ஆண்ட்ராய்ட் மொபைலின் மூலம் அந்த வசதியைப் பயன்படுத்தி இணையத்தில் இணைய முடிந்தது. தினமும் இரவு 60 நிமிடங்கள் long distance calls இலவசம். Gym ஒன்றும் இருந்தது.உள்ளே போய் அரசு ஆய்வு அதிகாரி போல் எல்லாக் கருவிகளையும் பார்த்து விட்டு வந்தேன். ’ஒரே நாளில் அர்னால்ட் ஆகலாம்’ என்ற புத்தகம் இதுவரை வெளிவரவில்லை(இனி வரலாம்!).இது தவிர மதிய நேரத்தில் சினிமா காட்டி, பாப் கார்னும் கோக்கும் தருவார்களாம். இண்டெர்நெட்,ம்ற்றும் ஷட்டில் வசதி பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். இப்படி வசதிகள் இருப்பதால் தான், அடிச்சுத்தொரத்தினால் கூடப் போகாத மாதிரிப் பலர் இங்கு தங்குயிருக்கிறார்கள்.
அன்று அலுவலத்திற்குச் சென்ற போது நான் சந்திக்கச் சென்றவர்கள், வெளியே சென்றிருந்தனர். தனியே காத்திருந்தேன்.மதியம் jimmy johns gourmet sandwich ஆர்டர் செய்து வரவழைத்து,சாப்பிடக் கொடுத்தார்கள். வாவ்! ஜிம்மி ஜான்ஸ் சாண்ட்விச் கடைக்கு நான் ஹூஸ்டனில் இருந்த போது போயிருக்கிறேன். அந்தக் கடையின் சுவற்றில் உள்ள போஸ்டர்களில் நல்ல கருத்துக்கள் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் படித்து விட்டுத்தான் கடையை விட்டு வெளியே வந்தேன். மேலும் அந்த சாண்ட்விச்சின் சுவை ஞாபகத்தில் இருந்தது. அது மீண்டும் சாப்பிடக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தேன்.கீழே உள்ள இணைய தளத்தில் ஜிம்மி ஜான்ஸ் ஃபோட்டோவும் அங்குள்ள ஒரு போஸ்டரின் வாசகங்களும்.
சந்திக்க வேண்டியவர்களைச் சந்தித்து விட்டு மீண்டும் ஹோட்டலுக்கு ஒரு நண்பரின் உதவியால் வந்து சேர்ந்தேன்.
கிக் பேக்கில் மாலை நேரத்துச் சாப்பாட்டை முடித்தேன். அதே நாச்சோஸ், அதே சல்சா... போங்கப்பா! 'History repeats' என்று சொல்வார்கள் அது அடுத்தடுத்த நாள் சாப்பாட்டில் நடந்தால் வயிற்றெரிச்சல் தான்.
ஷட்டில் வசதியைப் பயன் படுத்திச் சற்றுத் தொலைவிலிருந்த Radio shack எலக்ட்ரானிக்ஸ் கடைக்குப் போனேன். வண்டியை ஓட்ட வந்த இளைஞன் நான் ஏற்கனவே சோமபானம் கலக்கிக் கொடுக்கும் பணியிலிருந்ததைப் பார்த்திருந்தேன். அவனிடம் ’வாட் டைம் இட் இஸ்’ என்று கேட்க அவன் ‘இட்ஸ் Cold டைம்’ என்று சொல்லிச் சிரித்தான். ’என்னிடமே ஜோக்கா?. தம்பி!அப்புறம் நான் ஜோக் சொல்ல ஆரம்பிச்சா நீ ஹோட்டலை விட்டே ஓடிருவ’.அமெரிக்கர்கள் புதியவர்களிடம் முதல் பேச்சை இப்படியாக ஜோக் அடித்து ஆரம்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதை Ice breaker என்று சொல்கிறார்கள். இதை நம் தேசத்தில் செய்தால் Tooth breaker என்றாகி விடும்.
அவனை பாரில் பார்த்ததைச் சொன்ன போது அவன் ‘நான் ரிஷப்சனில் இருப்பேன், பாரில் இருப்பேன், சமையல் செய்வேன், ஷட்டில் வண்டி ஓட்டுவேன்’ என்றான். ‘Multi tasking' என்றேன். அதை ஆமோதித்துச் சிரித்தான்.
Radio shack கடையில் பொருள் வாங்கி விட்டு, ஹோட்டலுக்கு ஃபோன் பண்ண ஓசி ஃபோன் கேட்டேன். நான் ஃபோன் விலைக்குக் கேட்பதாய் நினைத்துக் கடைக்காரன் சில புது மாடல் ஃபோன்களை டேபிள் மேல் போட்டு எது வேண்டுமென்றான். "If anything can go wrong, it will" என்ற Murfey's law ஞாபகம் வருகிறதா?
வண்டி வரும் வரை அந்தக் கடையின் வெளியே காத்திருந்தேன். அந்தக் குளிருக்கு நான் போட்டிருந்த ஜெர்கின் சாதாரணமாக இருந்தது. குளிரில் நடுங்கினாலும் மீண்டும் கடைக்குள் போய் குளிருக்கு ஒதுங்க மனமில்லை. இப்படி பைசா பெறாத வில் பவர் சோதனை செய்து கொள்வதுண்டு.சிறிது நேரத்தில் வண்டி வந்து என்னை ’மீட்டு’ச் சென்றது.
Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/blog-post_05.html |
No comments:
Post a Comment